- Advertisement -
Homeபொழுதுபோக்குகூட்டணி நேரத்தில் மட்டுமே அனுமதி… மற்ற நேரத்தில் அதை ஏத்துக்க மாட்டேன் - தமிழக அரசியல்...

கூட்டணி நேரத்தில் மட்டுமே அனுமதி… மற்ற நேரத்தில் அதை ஏத்துக்க மாட்டேன் – தமிழக அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். கடந்த 50 ஆண்டுகால சினிமா வரலாற்றில் நடிகர் விஜயகாந்த் பெயரை குறிப்பிடாமல் யாரும் கடந்துவிட முடியாது. அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் பல மாற்றங்களுக்கு முன்னேற்றங்களுக்கு காரணமாக இருந்தவர். குறிப்பாக தமிழ் சினிமா துறையில் இருந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர்.

குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு பரிமாறப்பட வேண்டும் என்ற சமத்துவத்தை கொண்டு வந்தவர். அதே போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கடன் பிரச்னைகளை தீர்த்து வைத்தவர்.

- Advertisement -

மலேசியா சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளுக்கு ரஜினி கமல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை அழைத்துச் சென்று நட்சத்திர கலை இரவு நடத்தி அதன்மூலம் வந்த வருவாயில் நடிகர் சங்க கடனை அடைத்த திறமையாளர்.குறிப்பாக விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில் ஏராளமான திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு தனது படங்களை இயக்கும் வாய்ப்பளித்தவர்.

தனது படங்களை இயக்கும் வாய்ப்பு மட்டுமின்றி அந்த புதுமுக இயக்குனர்களின் படங்களை தனது சொந்த பேனரில் தயாரித்தவர். விஜயகாந்தை போல எந்த நடிகரும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க இன்றுவரை முன்வரவில்லை. தனது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக மாற்றியவர். தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி தமிழக அரசியலில் கலக்கத்தை ஏற்படுத்தியவர்.

- Advertisement -

ஆனால் துரதிஷ்டவசமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார். ஆறேழு ஆண்டுகளாகவே கடுமையான நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த அவர் 2023ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இயற்கை எய்திவிட்டார். எனினும் அவரது தேமுதிக கட்சி இப்போது அவரது மனைவி பிரேமலதா பொறுப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேப்டன் விஜயகாந்த் படத்தை எக்காரணம் முன்னிட்டும் எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. தேமுதிக கூட்டணிக்கு வரும்போது மட்டும் வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்