- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென ஸ்லிம் ஆக மாறிய நடிகர் அஜீத்குமார், அட இப்படி ஒரு காரணமும் இருக்குதா, இது...

திடீரென ஸ்லிம் ஆக மாறிய நடிகர் அஜீத்குமார், அட இப்படி ஒரு காரணமும் இருக்குதா, இது தெரியாம போச்சே? – ஆச்சரியப்பட்ட ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் தனுஷ் விஜய் போன்றவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கின்றனர். இவர்கள் குண்டாவதும் இல்லை, ஒல்லியாக மாறுவதும் இல்லை. ஒரே மாதிரியான உடல் எடையில், ஒரே மாதிரியான உடல்தோற்றத்தை பராமரித்து வருகின்றனர். அதனால் எந்த கேரக்டரில் நடித்தாலும், அவர்களுக்கு வெகு எளிதாக பொருந்துகிறது.

ஆனால் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்கள் தங்களது கேரக்டர்களுக்கு ஏற்ப சில படங்களில் உடல் எடையை அதிகரித்து ஆஜானுபாகுவான தோற்றத்தில் காட்சியளிப்பார்கள். திடீரென உடல் எடையை பலமடங்கு குறைத்து, கல்லூரி மாணவர் போன்ற தோற்றத்துக்கும் மாறி விடுவார்கள்.

- Advertisement -

அதே நேரத்தில் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, அஜீத்குமார் போன்றவர்கள் சில நேரங்களில் குண்டாக இருப்பார்கள். சில நேரங்களில் உடல் எடை குறைத்து காணப்படுவார்கள். அவர்கள் படங்களுக்காக அப்படி மாறுவது இல்லை. உணவு பழக்கம், பிஸி காரணமாக அவர்களது உடல் எடையை பராமரிக்க முடியாமல் போய்விடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு விடாமுயற்சி, குட்பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட நடிகர் அஜீத்குமார் புகைப்படங்கள் வெளியான போது உடல் பருமனுடன் அஜீத்குமார் காணப்பட்டார். அதே போல் விமான நிலையத்தில் இருந்து வெளியான அவரது வீடியோக்களிலும் குண்டாக தெரிந்தார்.

- Advertisement -

ஆனால் இப்போது ஸ்லிம் ஆன தோற்றத்தில் மிக அழகாக காணப்படுகிறார். அதுவும் விடாமுயற்சி படத்தில் பாடல் காட்சிக்காக கருப்பு தலைமுடி, கிளீன் ஷேவ், சூட் கோட் டை அணிந்த நிலையில் அவரது ஸ்மார்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதே மாதிரி ஸ்மார்ட்டாகவே இருங்கள். பெப்பர் ஒயிட் ஹேர்ஸ்டைல், தாடி மீசை வேண்டாம் என்று ஏகே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அஜீத்குமார் திடீரென இப்படி ஸ்மார்ட் ஆன தோற்றத்துக்கு மாறியது விடாமுயற்சி பாடல் காட்சிக்காக அல்ல. வரும் ஜனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்களுக்கு அவர் கார் பந்தயங்களில் கலந்துக்கொள்ள போகிறார். கார் பந்தய போட்டி விதிமுறைகளின்படி காரை ஓட்டும் போட்டியாளர் குறிப்பிட்ட எடையில்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அப்போதுதான் காரை ஓட்டும்போது உடல் பருமனால் அசவுகரியங்கள் ஏற்படாது. அந்த காரணத்துக்காக தான் அஜீத்குமார் தன் உடல் எடையை குறைத்து ஸ்மார்ட் ஆக மாறியிருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்