தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விஷால். குறிப்பாக செல்லமே திமிரு சண்டக்கோழி தாமிரபரணி சிவப்பதிகாரம் மலைக்கோட்டை துப்பறிவாளன் அவன் இவன் போன்ற பல படங்கள் விஷாலுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் தவிர மற்ற எந்த ஒரு படமும் அவருக்கான வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து விஷால் நடித்த பல படங்கள், தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி வந்த சுவடே தெரியாமல் போய் விட்டன. இதனால் விஷாலின் மார்க்கெட் இமேஜ் சரசர என கீழே இறங்கி விட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடி வசூலித்தது. விஷால், எஸ்ஜே சூர்யா, ராஷி கண்ணா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், காமெடி ஆக்சன் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. டைம் டிராவல் படமாக, வித்யாசமான கதைக்களம் படம் அசத்தியது.
மார்க் ஆண்டனி படத்தை பொருத்த வரை, படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது நடிப்பு அரக்கன் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்புதான். அதனால் மார்க் ஆண்டனி வெற்றிக்கு எஸ்ஜே சூர்யா மிக முக்கியமான காரணமாக இருந்தார். அதனால் மீண்டும் மார்க் ஆண்டனி 2ம் பாகமாக எடுக்க நடிகர் விஷால் இப்போது முயற்சித்து வருகிறார்.
ஏனெனில் அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி வருகின்றன. துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தை விஷால் இயக்கி நடிக்க முடிவு செய்த நிலையில் அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. அதனால் துப்பறிவாளன் 2 திட்டத்தை விஷால் இப்போது மீண்டும் கிடப்பில் போட்டுவிட்டார்.
இப்போது இயக்குனர் ஹரி, குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஹரி இயக்கிய ரத்னம் படம் பிளாப் ஆன நிலையில், மீண்டும் அவருடன் விஷால் பேசியிருக்கிறார். அதே போல் மார்க் ஆண்டனி 2ம் பாகத்தை எடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் முன்வர அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அஜீத் நடித்த விடாமுயற்சி படத்தை இயக்கிய பிறகு, விஷால் படத்தை இயக்குவாரா என்பதும் கேள்வியாக உள்ளது.





