- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிட தயார் - பிரபல காமெடி...

விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிட தயார் – பிரபல காமெடி நடிகர் பகிரங்க சவால்!

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் கடந்த ஓராண்டாக விஸ்வரூபம் எடுத்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்ததை பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று தான் மற்ற அரசியல் கட்சியினர் அலட்சியமாக நினைத்தனர். பிறகு கமல் போல இவரும் அரசியலில் விரைவில் காணாமல் போவார் என்றும் கிண்டல் செய்தனர்.

ஆனால் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் அரசியல் மாநாட்டை பார்த்து தமிழக அரசியல் கட்சியினர் ஆடிப்போய்விட்டனர், லட்சக்கணக்கில் மாநாட்டில் திரண்ட மக்கள் கூட்டமும் 48 நிமிடங்கள் விஜயின் ஆவேசப் பேச்சும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அதிகமாக பேசாமல் மவுனம் காக்கும் நடிகர் விஜய், தனது கட்சி மேடையில் மத்திய மாநில அரசுகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியதும் தனது எதிர்கால அரசியல் கொள்கைகள் குறித்து விளக்கியதும் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி தந்ததும் பெரிய அளவில் பேசும்பொருளாக மாறியது.

இந்நிலையில் தமிழில் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். லத்திகா என்ற படத்தை இயக்கி 2011ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமான அவர் லட்டு தின்ன ஆசையா ஒன்பதுல குரு ஐ உள்ளிட்ட சில படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார். சென்னையில் வடபழனியில் நேற்று நடந்த திரைப்பட பூஜை ஒன்றில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறுகையில், எனக்கும் ரசிகர்கள் உள்ளனர். விஜயை போல் எனக்கும் கூட்டம் கூடும். முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள். மேடையில் பேசுவது எல்லாம் பஞ்ச் டயலாக் வசனங்கள். சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.

எந்த கட்சி அழைத்தாலும் விஜயை எதிர்த்து போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டுமே தவிர. கூட்டம் இருக்கிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடைகளில் பேசக்கூடாது என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்