- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஷ்கின் சோலி முடிஞ்சிட்டு, எல்லாத்துக்கும் அந்த வாய்தான் காரணம்

மிஷ்கின் சோலி முடிஞ்சிட்டு, எல்லாத்துக்கும் அந்த வாய்தான் காரணம்

- Advertisement -

தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழ்ந்து வரும் மிஷ்கின், சமீப காலமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்த “மாவீரன்” திரைப்படம் வெளிவந்தது. ஒரு பயங்கரமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார் மிஷ்கின். அவரது ஒவ்வொரு அசைவும் மிக டெரராக இருந்தது. அதே போல் மிஷ்கின், “லியோ” திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இவ்வாறு ஒரு இயக்குனராக மட்டுமல்லாது, ஒரு சிறந்த நடிகராகவும் மிஷ்கின் ஜொலித்து வருகிறார். “மாவீரன்” திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கினுக்கு அதிக பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையோ வேறு விதமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

மிஷ்கின் பொது மேடைகளில் மிகவும் துணிச்சலாக பேசி விடுவார் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் பேசுவது பல நேரங்களில் சர்ச்சையில் முடிவதும் உண்டு. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது மிஷ்கினுக்கு வேறொரு சிக்கல் எழுந்துள்ளதாம்.

அதாவது மிஷ்கினை நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். “மாவீரன்”, “லியோ” ஆகிய திரைப்படங்களில் நடித்த போது மிஷ்கின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோரை அருகில் அழைத்து பல மணி நேரம் பேசி பேசியே மொக்கை போடுவாராம். இதனால் படக்குழுவினர் யாரும் அவர் அழைத்தால் கூட போக மாட்டார்களாம்.

மிஷ்கினின் இந்த போக்குதான் அவருக்கு இப்போது எமனாக அமைந்திருக்கிறது. இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரவிய நிலையில் யாரும் தங்களது திரைப்படங்களில் மிஷ்கினை நடிக்க வைக்க தயாராக இல்லையாம். இந்த நிலையில் மிஷ்கின் தான் இயக்கவுள்ள ஒரு திரைப்படத்தின் டிஸ்கஷன் பணிக்காக சேலத்திற்கு சென்றுள்ளாராம்.

சற்று முன்