சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். அப்போது தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தார். வழக்கமாக எகத்தாளம் நக்கல் லொள்ளு குசும்பு என அனைத்தையும் அவரது பேச்சில் வெளிப்படுத்தி விஜயை மட்டம் தட்டி பேசினார்.
நடிகர் விஜய் படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் சினிமாவில் இருந்தால் தான் ஜாலியாக இருக்கும். அவர் படம் பார்க்காவிட்டால் எனக்கு இரவில் தூக்கமே வராது. அதனால் அவரை சினிமாவுக்கே திருப்பி அனுப்பி விடுவோம் என்றெல்லாம் அவரை கலாய்த்து சத்யராஜ் பேசினார்.
மேலும் தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது கொடநாட்டில் விஜய் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், எப்படியாவது என் படத்தை ரிலீஸ் செய்யுங்கம்மா என்று கெஞ்சியதாகவும் மேடையில் கிண்டலடித்து நடித்துக் காட்டினார்.
மேலும் ஸ்டாலினை அங்கிள் என்று பேசியது போது ஜெயலலிதாவை ஆண்ட்டி என்று சொல்லி இருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள் என்றும் கிண்டலடித்தார். நடிகர் விஜயுடன் தலைவா மெர்சல் நண்பன் என 3 படங்களில் நடித்த சத்யராஜ், சக நடிகர் பெரிய ஹீரோ மக்கள் விரும்பும் ஒரு அரசியல் தலைவர் என்பதை மறந்து வாங்குகிற காசுக்கு மேல கூவுகிறார் என்று தளபதி ரசிகர்கள் தவெக தொண்டர்கள் சத்யராஜை விமர்சித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு சத்யராஜ் குறித்து கூறியதாவது, தலைவா படத்துக்காக விஜய் மன்னிப்பு கேட்டார் என்று கிண்டலாக சொன்னீங்க? சரி நீங்க பாகுபலி படம் வெளியான போது நீங்க என்ன பண்ணினீங்க? கர்நாடக மக்களை நீங்கள் விமர்சித்ததை மனதில் வைத்துக்கொண்டு நீங்க நடித்த பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
நீங்க பகிரங்கமா மன்னிப்பு கேட்டால்தான் கர்நாடகாவில் பாகுபலி படம் ரிலீஸ் ஆகும்ன்னு சொன்னபோது, நான் பச்சை தமிழன். திராவிடன். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணிச்சலாக சொன்னீர்களா? அந்த படம் ரிலீஸ் ஆகணும் என்பதற்காக உடனே கன்னடர்கள் கிட்ட வீடியோ வெளியிட்டு பகிரங்கமா மன்னிப்பு கேட்டீங்களா இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





