- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பார்த்த ரிசல்ட் வரலையே பங்கு, ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் - அஜீத்குமாரை நினைத்து வெங்கட் பிரபு...

எதிர்பார்த்த ரிசல்ட் வரலையே பங்கு, ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் – அஜீத்குமாரை நினைத்து வெங்கட் பிரபு போட்ட கணக்கு சரியா வருமா?

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் நடிப்பில், கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை உருவாக்கி செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் விசில் போடு என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது.

விஜய் நடித்துள்ள இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் துவங்கியுள்ள நிலையில், இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் இன்னும் அவருக்கான இமேஜ் அதிகரிக்கும், மக்கள் மத்தியில் மாஸ் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

அதன்பிறகு விஜய் 69 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதுவே அவரது கடைசி படம். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இது முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில், அரசியல் பேசும் படமாக இருக்கும். ஏறக்குறைய விஜய் அரசியலுக்கு நுழைவதற்கு முன்பான, ஒரு அதிரடி முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கொஞ்சம் ஜாலியான படம் பண்ணலாம் என்று தான் வெங்கட்பிரபுவுக்கு விஜய் வாய்ப்பு அளித்தார். ஆனால் விஜயின் எதிர்பார்ப்பு பொய்த்து போய்விடுமோ என்ற அளவுக்கு, விசில் போடு பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை, விசில் போடு பாட்டில் எடுபடவில்லை. இசை தரமாக இல்லை, பாடல் வரிகளும் ரசிகர்களுக்கு வசனம் போல் தான் தோன்றுகிறது. ஒரு முத்தாய்ப்பாக பாடல் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு, பல ஆண்டுகளுக்கு முன் அஜித்குமார் நடிப்பில் மங்காத்தா என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், க்ளைமாக்ஸில் நடிகர் அர்ஜுனுக்கு முக்கியத்துவம் தந்ததால் வெறுத்துப் போன அஜித்குமார், பிறகு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வெங்கட் பிரபுவுக்கு அனுமதி தரவில்லை. அது மட்டுமின்றி வெங்கட் பிரபுவை கண்டுகொள்வதும் இல்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை.

எனவே கோட் படத்தை பார்த்துவிட்டு, அஜித்குமாரே அழைத்து தனக்கு மீண்டும் அவர் படத்தை இயக்கும் வாய்ப்பை தர வேண்டும் என்ற ஒரு வீராப்புடன், ஒரு ஆவேசத்துடன் கோட் படத்தை இயக்கி வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்ப்பை எல்லாம் நொறுக்கி விடும் விதமாக கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கோட் எடுபடுமா, பெரிய வெற்றியை கொடுக்குமா என்பதே பெரிய கேள்வியாக மாறி வருகிறது.

- Advertisement -

சற்று முன்