- Advertisement -
Homeபொழுதுபோக்குடப்பிங் பேச மறுத்த நடிகை பிரியாமணி, கையை பிடித்து அழுத்திய இயக்குனர் அமீர் - பருத்திவீரன்...

டப்பிங் பேச மறுத்த நடிகை பிரியாமணி, கையை பிடித்து அழுத்திய இயக்குனர் அமீர் – பருத்திவீரன் படத்துக்கு பின்னால் இத்தனை சம்பவங்கள் நடந்திருக்கா?

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது பருத்திவீரன். நடிகர் கார்த்தி அறிமுகமான முதல் படம். முத்தழகு கேரக்டரில் நடித்த நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது பெற்றுத் தந்த படம். இப்போதும் பருத்திவீரன் படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது.

நேர்காணல் ஒன்றில் பருத்திவீரன் பட இயக்குனர் அமீர் கூறியதாவது, பருத்திவீரன் படத்தில் தமிழ் பேசும் பெண்தான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக நான் இருந்தேன். ஏனென்றால் அந்த கதையை எழுதும்போதே இந்த படத்தை தூக்கி பிடிக்கப் போவதே முத்தழகு கேரக்டர்தான் என்பது எனக்கு தெரிந்து விட்டது.

- Advertisement -

கண்களால் கைது செய் படத்தில் நடித்த பிரியாமணியை என்னிடம் அப்போது குமார் என்பவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரது முகத்தோற்றம் இந்த கதைக்கு சரியாக வரும் என்று என் மனசுக்கு பட்டது. பெங்களூருவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் பேசும் பெண்ணாகவும் அவர் இருந்ததால் அவரை பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடிக்க வைத்தேன்.

ஆனால் ஷூட்டிங்கில் வெயிலில் நடிக்க அவர் சிரமப்பட்டார். அடிக்கடி கோபித்துக்கொண்டார். பிறகு நான் அவரிடம் தனியாக ஒரு அறையில் கண்டிப்பாக பேசினேன். நானும் வெயிலில் கஷ்டப்படுகிறேன். நீயும் வெயிலில் நடிக்க கஷ்டப்படுகிறாய். எல்லாமே படத்துக்காக தான் செய்கிறோம். தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை என்று சொல்லி புரிய வைத்தேன்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் டப்பிங் பேச முடியாது என மறுத்துவிட்டார். எனக்கு டப்பிங் பேசி பழக்கமில்லை என்றும் கூறினார். உனக்கு தேசிய விருது வேண்டும் என்றால் டப்பிங் பேசு, இல்லை என்றால் வேண்டாம் என்று கூறி, டப்பிங் பேச நான் சொல்லித் தருகிறேன் என்று கூறி அவரை ஏவிஎம் ஸ்டுடியோ டப்பிங் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

நடிகை பிரியாமணியின் கையை பிடித்துக்கொண்டு நான் அழுத்தமாக பிடித்தால் அந்த வார்த்தைகளை சத்தமாக பேசு, கையை விட்டால் மெதுவாக பேசு என்று சொல்லிக்கொடுத்து பேச வைத்தேன். ஆனால் கடைசியில் ஒரு போர்ஷன் அவர் பேச வராமல், ஒரு விழாவுக்கு போய்விட்டார். பிறகு வேறொரு பெண்ணை அந்த சீனில் பேசவைத்து காட்சியை முடித்தேன் என்று அமீர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்