- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகர்தான் எனக்கு பெரிய ரோல் மாடல்; இப்படி சொன்னது மாஸ் ஹிட் படங்களை தந்த...

அந்த நடிகர்தான் எனக்கு பெரிய ரோல் மாடல்; இப்படி சொன்னது மாஸ் ஹிட் படங்களை தந்த டைரக்டர் சேரன் – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். ஆரம்பத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிசெய்த அவர் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு இன்னொரு தேசிய கீதம் தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

முதலில் இயக்குனராக இருந்த சேரன் பிறகு அவர் இயக்கிய ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து படங்களில் அவரே நடிக்கவும் செய்தார். பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தங்கர்பச்சானின் சொல்ல மறந்த கதை ராமன் தேடிய சீதை கரு பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் என பல படங்களில் நடிக்கவும் செய்தார். இயக்குனராக நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சேரன்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் நடிகர் சேரன் கூறியதாவது, எங்கள் ஊர் மேலூரில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடிகராக வெற்றி பெற்றவர் ராமராஜன். அவர் மேலூரில் கணேஷ் தியேட்டரில் வேலை செய்து, பிறகு கிடைத்த சில வாய்ப்புகளால் சினிமாவுக்குள் வந்து நாயகனாக ஜெயித்தவர்.

அப்போது அவர் உச்சத்தில் இருந்தார். அதனால் அவரை போல் நானும் ஜெயித்து விடலாம் என்று சினிமாவுக்குள் நானும் வர ஆசைப்பட்டேன்.என்னுடைய ரோல் மாடலாக அவரை எடுத்துக்கொண்டு நடிகராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் பெரும் திரளான கூட்டம் நிற்கிறது.

- Advertisement -

அந்த பெரும் திரளான கூட்டத்தில் 6 அடி உயரம், சிவந்த நிறம், ஆஜானுபாகுவான தோற்றம் என இருக்கின்றனர். நான் பார்த்தால் ஓமக்குச்சி நரசிம்மன் போல இருக்கிறேன். அவர்கள் பக்கத்தில் எல்லாம் நான் நிற்க கூட முடியாது என்ற நிலைதான். அப்படி கூட்டத்தில் ஒருவனாக நம்மை தேர்வு செய்வார்களா என்ற கேள்வி வந்த பின்புதான் எனக்கு ஒரு மாற்றம் வந்தது.

இந்த வழியில் போனால் நடிகனாக முடியாது. அதனால் பாக்யராஜ், பாரதிராஜா பாலசந்தர் ஆகியோரை பார்க்கும் போது இவர்களை போல இயக்குனர் ஆனால் நான் நடிகனாகலாம் என்ற நம்பிக்கை வந்தது. அப்படிதான் நான் இயக்குனராக முயற்சித்து அதில் வெற்றி பெற்றேன். அதன்பிறகு நான் நடிகராக மாறினேன். அந்த வகையில் என்னுடைய இன்ஸ்பிரேஷனாக முதலில் இருந்தவர் நடிகர் ராமராஜன்தான் என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்