- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படம் வெளியாகும் நேரத்தில், தயாரிப்பாளர் போட்ட அதிரடி பிளான் - போடு வெடிய,...

இந்தியன் 2 படம் வெளியாகும் நேரத்தில், தயாரிப்பாளர் போட்ட அதிரடி பிளான் – போடு வெடிய, இது 2கே கிட்ஸ்க்கு அடிச்ச செம லக்குதான்

- Advertisement -

நடிகர் விஜய் கடந்த 2004ஆம் ஆண்டில் நடித்து வெளியான படம் கில்லி. இந்த படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரித்திருந்தார். கில்லி படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த கில்லி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மதுரைக்கு கபடி விளையாட செல்லும் படத்தின் நாயகன், விஜய் வில்லன் பிரகாஷ் ராஜிடம் இருந்து, கதாநாயகியை திரிஷாவை காப்பாற்றி மீட்டு வருவதுதான் படத்தின் மையக்கரு. இந்த படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்ட படமாக தியேட்டர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

கடந்த 20ம் தேதி ரிலீஸ் ஆன கில்லி படம், ஒரே வாரத்தில் பல கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையில், மலையாள படங்களான மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, பிரமயுகம் போன்ற மலையாளப் படங்கள் வெற்றி பெற்றன. இப்போது அந்த படங்களை ஈடாக ஒரு மாஸ் படமாக ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இதை தொடர்ந்து ரி ரிலீஸ் படங்கள் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு வந்துள்ளது. அதனால் குஷி படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் திட்டமிட்டுள்ளார். விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வந்த குஷி, மிகப்பெரிய வெற்றிப்படமாகும்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம், வரும் ஜூன் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்பே கடந்த 1996 ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியானது. அந்த படத்தின் தொடர்ச்சியாக தான் இப்போது இந்தியன் 2 படம் வெளிவருகிறது. இந்தியன் படம், 1996லேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். இந்த படம் 27 ஆண்டுகளுக்கு முன் வந்த படம் என்பதால், 2கே கிட்ஸ்க்கு இந்தியன் படம் பற்றிய ஒரு அறிமுகம் கிடையாது.

அதனால் இந்தியன் 2 படத்தை பார்க்கும்போது, அவர்களுக்கு அது ஒரு புதிய படமாக, முழுமையாக புரியாது. அதுவே 27 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படத்தை பார்த்துவிட்டு, இந்தியன் 2 படத்தை பார்த்தால், படம் தெளிவாக புரியும். இது ஒரு விதத்தில் இந்தியன் 2 படத்தின் வெற்றிக்கு மிக உதவியாக அமையும். 27 ஆண்டுகளுக்கு முன் தனது தயாரிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தை வெளியிட்டு பல கோடிகள் லாபமடையும் வகையிலும், வரும் மே 30ம் தேதி ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏஎம் ரத்னம் இந்தியன் படத்தை ரி ரிலீஸ் செய்கிறார்.

- Advertisement -

சற்று முன்