- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு இப்படி ஒரு சிக்கலா? கைதி 2 படம் போல வெளியான கன்னட...

இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு இப்படி ஒரு சிக்கலா? கைதி 2 படம் போல வெளியான கன்னட படம் மேக்ஸ் – என்னய்யா நடக்குது இங்கே?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ படங்களை தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வருகிற 2025ம் ஆண்டு மார்ச்சில் கைதி 2 படத்தின் ஷூட்டிங்கை துவங்க திட்டமிட்டுள்ளார்.

இந்த சூழலில் இப்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்த மேக்ஸ் என்ற கன்னடம் படம் வெளியாகி உள்ளது. விஜய் கார்த்திகேயா டைரக்‌ஷனில் இது தமிழிலும் வந்துள்ளது. ஏனெனில் இந்த படத்தை தமிழ்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், இளவரசு போன்ற தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

கன்னடத்தில் கடந்த 25ம் தேதி வெளியான இந்த படம், இப்போது தமிழ்நாட்டிலும் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு பரபரப்பு குறையாமல் படத்தை மிக சூப்பராக தந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நான் ஈ புலி பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்த சுதீப், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள இந்த படத்தின் கதை முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் இரவில் நடக்கிறது. 2 கைதிகள் ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலையில், அவர்களை காப்பாற்ற ரவுடிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடுவதே படத்தின் மைய கதைக்களமாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் கதைக்களம், இயக்கத்தை பொருத்த வரை படம் பார்க்கும் ரசிகர்கள் யாருமே ஆரம்பம் முதல் இறுதிவரை சீட் நுனியில் அமர்ந்து காட்சிக்கு காட்சி ஆச்சரியமாகவும், பரபரப்பாகவும் பார்க்கும் அளவுக்கு இந்த படத்தின் திரைக்கதை, காட்சியமைப்புகள் மிக சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏறக்குறைய கைதி 2 படத்தின் கதை போன்றே மேக்ஸ் படம் இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு கைதி 2 படம் எடுத்தால்தான் சரியாக வரும். இல்லை என்றால் இந்த படத்தை காப்பியடித்து கைதி 2 எடுத்தது போலாகிவிடும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கைதி 2 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா என தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்