- Advertisement -
Homeபொழுதுபோக்கு2024ம் ஆண்டில் இந்திய அளவில் டாப் 10 இடங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் -...

2024ம் ஆண்டில் இந்திய அளவில் டாப் 10 இடங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் – இதில் தமிழ் படங்கள் இடம்பிடித்திருக்கிறதா?

- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்றை பெரும் படங்களே அந்த ஆண்டின் சிறந்த வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக வசூலில் முன்னிலை பெற்ற படங்களை எப்போதும் வெற்றியை தீர்மானிக்கின்றன.

இந்த காலகட்டத்தில் ஹீரோவின் ஸ்டார் வேல்யூ டைரக்டர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பல விஷயங்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் முன்னிலை வைக்கின்றன. பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்கள் சிறந்த கதை அம்சம் கொண்டதாக இருந்தாலும் சில நேரங்களில் அந்த படங்கள் வெற்றி பெறுகின்றன. பல நேரங்களில் அந்த படங்கள் தோல்வியடைகின்றன.

அதுவும் கடந்த சில ஆண்டுகளாக பான் இந்தியா படங்கள் உருவாக துவங்கிவிட்ட நிலையில், எல்லா மாநிலங்களிலும் எல்லா மொழிகளிலும் அந்த படங்கள் வெளியாக இருப்பதால் ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு ஸ்டார் நடிகர் நடிப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் எந்த படத்தை எடுத்தாலும் எல்லா மொழி கலைஞர்களும் அந்த படத்தில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலை சமீப காலமாக உருவாகி வருகிறது.

இது வியாபார ரீதியாக வெற்றியை தந்தாலும் கலைத்துறை ரீதியாக சினிமாவின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதனால் 2ம் நிலை 3ம் நிலை கதாநாயகர்கள் கதாநாயகிகள், துணை நடிகர்கள், காமெடி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வெகுவாக குறைவதோடு சின்ன பட்ஜெட் படங்கள் உருவாவதே சவாலாகி விடுகிறது.

அதே நேரத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் வருவதே தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டது. சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காணாமல் போய்விடுகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் இந்தியாவில் அதிகளவில் வசூலித்த டாப் 10 படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகும். அந்த வகையில் 2024ம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த டாப் இந்திய திரைப்படங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி 1. புஷ்பா 2 ரூ. 1705 கோடி, 2. கல்கி 2898 ஏடி ரூ.1,200 கோடி, 3. ஸ்ட்ரீ 2 – ரூ. 874 கோடி 4. தேவரா ரூ. 521 கோடி 5 கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் ரூ. 440 கோடி 6. பூல் பூலய்யா ரூ. 417 கோடி 7. சிங்கம் அகைன் ரூ. 389 கோடி 8. ஹனுமான் ரூ 350 கோடி, 9 பைட்டர் 344 கோடி 10, அமரன் படம் ரூ. 340 கோடி எனறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் விஜயின் தி கோட் படம் 5வது இடத்தையும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

சற்று முன்