- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 படத்தில் நடிக்க ஓகே சொன்னது ஏன்? நடிகர் அதர்வா...

சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 படத்தில் நடிக்க ஓகே சொன்னது ஏன்? நடிகர் அதர்வா சொன்ன விளக்கம் – ஜெயம் ரவியும் இப்படி ஒரு காரணம் சொல்வாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் முரளி. 1980,90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவரது மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து ஈட்டி சண்டிவீரன் 100 கணிதன் பரதேசி உள்ளிட்ட பல படங்களில் அதர்வா நடித்தார். ஆனால் அதர்வா நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வரவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் நிறங்கள் மூன்று படமும் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்போது அதர்வா டிஎன்ஏ அட்ரஸ் தானா ஆகிய 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையே இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 25வது படத்தில் நடிக்கவும் அதர்வா நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜூனுடன் ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்ட ஐட்டம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஜெயம்ரவி நடிக்கிறார். அதே போல் அதர்வாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் அதர்வா நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனென்றால் அதர்வா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். அப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா நடிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் தந்துள்ளார்.

இதுகுறித்து அதர்வா கூறுகையில், இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நான் நடித்த போதே இயக்குனர் சுதாவை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து பணி செய்வோம் என்று சுதா கொங்கரா ஏற்கனவே என்னிடம் கூறியிருந்தார். அதன் காரணமாகவே இந்த படத்தில் அவர் நடிக்க அழைத்ததும் நான் சம்மதம் தெரிவித்தேன். இந்த படத்தில் அவர் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கிறார். இது எனக்கு திருப்புமுனையை தரக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்