- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் பட வில்லன், விஜய் படத்தில் மீண்டும் நடிக்கிறாரா? - அட இவர் பிக்பாஸ் பிரபலம்தானே?...

அஜீத் பட வில்லன், விஜய் படத்தில் மீண்டும் நடிக்கிறாரா? – அட இவர் பிக்பாஸ் பிரபலம்தானே? – 18 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த சூப்பர் சான்ஸ்

- Advertisement -

விஜய், அஜீத் படங்களில் நடித்துவிட்டால் போதும், பல ஆண்டுகள் கழிந்தாலும் அந்த நடிகருக்கு விஜய் படத்தில் அந்த கேரக்டரில் நடித்தவர், விஜய் படத்தில் இந்த கேரக்டரில் நடித்தவர் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளம் கிடைத்துவிடும். அந்த வகையில், இப்போது விஜய் 68 படத்தில் கேரக்டரில் நடிக்கிறார் அந்த பிரபல நடிகர்.

கடந்த 2001ம் ஆண்டில் அஜீத்குமார் நடித்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில், அஜீத்குமார் ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். ஜோதிகா மீது ஆசைப்படும் ஒரு கேரக்டரில் யுகேந்திரன் நடித்திருப்பார். இவர் பிரபல பாடகர் மறைந்த மலேசியா வாசுதேவன் மகன் என்பது சிறப்பு தகவல். தொடர்ந்து பல படங்களில் யுகேந்திரன் நடித்தார்.

- Advertisement -

அதற்கு பின் விஜயுடன் சில படங்களில் யுகேந்திரன் நடித்தார். யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி போன்ற படங்களில், துணை கதாபாத்திரத்தில் யுகேந்திரன் நடித்திருந்தார். அதில், திருப்பாச்சி படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஒரு பேசக்கூடிய அளவுக்கு மிக முக்கியமான நடிப்பை இவருக்கு, இயக்குநர் பேரரசு தந்திருந்தார்.

அதன்பிறகு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பின்றி, 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார் யுகேந்திரன். ஆனால், அவரது தந்தை மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களை, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று யுகேந்திரன் பாடி வருகிறார். ஏனெனில் மலேசியா வாசுதேவன், 1980, 1990களில் ரஜினி, கமல் நடித்த பல ஹிட் படங்களுக்கு அவர்தான் முக்கிய பாடகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யுகேந்திரன் பங்கேற்றார். நல்ல முறையில் விளையாடினார். எனினும் ஒரு கட்டத்தில் அவர் போதிய ஓட்டுகளை பெறாமல் வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் வரை மிகத் தெளியாக பேசிய போட்டியாளர் இவர். மிகவும் தன்மையாக நடந்துக்கொண்டதாக பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.

இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 68 படத்தில், யுகேந்திரன் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. எஸ்பிபி, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன், இளையராஜா என ஒரு நண்பர் கூட்டம் போல, அவர்களது மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, எஸ்பிபி சரண், யுவன்சங்கர் ராஜா வரிசையில் இப்போது மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரனும் அந்த குழுவில் ஐக்கியமாகி விட்டார். அத்துடன் 18 ஆண்டுகளுக்கு பின், விஜய் படத்தில் அவருடன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்