- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரது வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நடிகர்...

அவரது வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

அரசியல் என்றாலே பதவி ஆசை, ஊழல், பொய்யான வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றுதல், ஓட்டுக்கு துட்டு என்று மக்களின் ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதே கேலிக்கூத்தாகி போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், இன்னும் அதிசயமான மனிதர்களாக சில அரசியல் தலைவர்கள் இருக்கவே செய்கின்றனர்.

அப்படி தன்னலமற்ற ஒரு மிகச்சிறந்த பண்புமிக்க அரசியல் தலைவராக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழ நெடுமாறன் செய்திருந்தார்.

- Advertisement -

தலைவர் நல்லகண்ணுவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கட்சி சார்பில் 85 லட்சம் ரூபாய் நிதியாக தரப்பட்டது. வயது 90 கடந்த நிலையில், அவரது தினசரி வாழ்க்கை செலவு, குடும்ப செலவுகளுக்காக இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கட்சி சார்பில் அந்த நிதியை அவருக்கு வழங்கிய போது, இது எனக்கு வேண்டாம், மக்கள் பணி செய்கிற திருப்தியே போதும். இதை கட்சிக்கு நான் நிதியாக திருப்பி தருகிறேன் என்று, மறுத்தவர்தான் நல்லக்கண்ணு.

அப்படிப்பட்ட சிறந்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவுக்கா நடந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நல்லகண்ணு குறித்த 100 கவிஞர்கள் 100 கவிதைகள் என்ற கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் வெளியிட்டார். பல கட்சி தலைவர்கள் நல்ல கண்ணுவின் அரசியல் பணிகளை, மக்கள் பணிகளை பாராட்டிப் பேசினர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, விடுதலைப் போராட்ட வீரர் நல்ல கண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டும்.

காலில் செருப்பு, தீபாவளி பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்ற தலைவர்கள் ரத்தம் சிந்தி நமக்கு பெற்றுத் தந்தது. இதுபற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன். இதனால் பலனடைந்த பல பேர்களில் நானும் ஒருவன் என்றும் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்