- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 பாகங்களாக உருவாகும் வாடிவாசல் படம், விடுதலை 2 ரிலீஸ்க்கு காத்திருந்தது போதாதா? - வெற்றிமானை...

3 பாகங்களாக உருவாகும் வாடிவாசல் படம், விடுதலை 2 ரிலீஸ்க்கு காத்திருந்தது போதாதா? – வெற்றிமானை நம்பலாமா, விரக்தியடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர். பிறகு பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை என வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 6 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து விடுதலை படத்தின் தொடர்ச்சியாக விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டில் மார்ச் 31ம் தேதி விடுதலை முதல் பாகம் வௌியான நிலையில், 6 மாதங்கள் இடைவெளியில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் விடுதலை 2 வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் 6 மாதங்கள் என்பது 20 மாதங்கள் ஆன நிலையில், இந்த மாதம் 20ம் தேதி தான் விடுதலை 2 படம் வெளியானது. தியேட்டரில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்த படம், போராட்டகளமாகவே படம் முழுவதும் இருப்பதால் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துவிட்டது. பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் திருப்தியளிக்கவில்லை.

இந்நிலையில் தியேட்டரில் இரண்டே முக்காமல் மணி நேரம் ஓடும் படம், ஒரு மணி நேர கூடுதல் காட்சிகளுடன் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அப்படி என்றால் ஒரு மணி நேர முக்கிய காட்சிகள் இல்லாத படமாக விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகியுள்ளதா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்து ஏமாற்றமடைய செய்துள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் அடுத்து நடிகர் சூர்யா, இயக்குனர் அமீர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வாடிவாசல் படப்பிடிப்பு வரும் 2025ம் ஆண்டில் மார்ச் மாதம் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் மீண்டும் துவங்குவதே ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது.

ஆனால் இதற்கிடையே வாடிவாசல் படத்தை 3 பாகங்களாக வெற்றிமாறன் எடுக்க உள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது. விடுதலை 2 படத்தையே 20 மாதங்களுக்கு மேல் இழுத்தவர், வாடிவாசல் 3 பாகங்களை எத்தனை ஆண்டுகளில் முடிக்கப் போகிறாரோ என்ற விரக்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பக்காவாக பிளான் செய்து, படப்பிடிப்பை குறிப்பிட்ட மாதங்களில் வெற்றிமாறன் முடித்து காட்டுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்