- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு பாராட்டு விழா வேண்டாம் என்று சொன்னேன், அந்த காரணத்துக்காக மறுத்தேன் - இயக்குனர்...

எனக்கு பாராட்டு விழா வேண்டாம் என்று சொன்னேன், அந்த காரணத்துக்காக மறுத்தேன் – இயக்குனர் பாலா ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

கடந்த 1999ம் ஆண்டில் விக்ரம் நடித்த சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். தொடர்ந்து நந்தா பிதாமகன் நான் கடவுள் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை ரசிகர்களுக்கு தந்தார்.

வருகிற ஜனவரி 10ம் தேதி பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே கடந்த 18ம் தேதி சென்னையில் வணங்கான் பட இசை வெளியீட்டு விழா, சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா நடந்தது.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா சிவக்குமார் சிவகார்த்திகேயன் அருண் விஜய் இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் பாலா இயக்கிய படங்களில் நடித்த ஆர்யா விஷால் விக்ரம் அதர்வா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. ஆனால் வணங்கான் படத்தில் இருந்து நடிக்காமல் விலகிய சூர்யா கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, நான் 25 ஆண்டுகளில் மிக குறைவான படங்கள் பண்ணியதற்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம். என்னுடைய சோம்பேறித்தனம். என்னுடைய சுகங்களை விட்டுக்கொடுத்து கடுமையான உழைத்து என்ன பண்ண போறோம். சோம்பேறித்தனம் என்றால் படுத்து தூங்குகிற சோம்பேறித்தனம் இல்லை.

- Advertisement -

இப்போது பண்ணாவிட்டால் என்ன, கொஞ்சம் லேட்டா பண்ணலாமே, டைம் எடுத்து மெதுவா பண்ணலாமே என்ற எண்ணம்தான். ஆனால் அது தவறுதான். இன்னும் ஒரு 10 படமாவது பண்ணியிருக்கலாம். அதனால்தான் பாலா 25 பாராட்டு விழாவை கூட மறுத்தேன்.

அந்த விழாவை ஏற்பாடு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூட சொன்னேன். நான் ஒண்ணும் பெரிசா பண்ணலே. ஏழெட்டு படம்தான் பண்ணியிருக்கேன். இதை வெச்சுக்கிட்டு இந்த விழா நடத்தணுமா என்றேன். ஆனால் அவர், நீங்க சினிமாவுக்குள் வந்து 25 வருஷமாச்சு, சேது படம் வந்து 25 வருஷம் ஆச்சு என்று அடம்பிடித்து இந்த விழாவை நடத்தினார். ஒரு அளவுக்கு மேல் என்னால் மறுக்க முடியவில்லை என்று பாலா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்