- Advertisement -
Homeபொழுதுபோக்குஹெச்.வினோத் ஒரு அரக்கன்... உண்மை சம்பவத்தைக் கூறி நெகிழ வைத்த கத்துக்குட்டி பட இயக்குனர்...

ஹெச்.வினோத் ஒரு அரக்கன்… உண்மை சம்பவத்தைக் கூறி நெகிழ வைத்த கத்துக்குட்டி பட இயக்குனர்…

- Advertisement -

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச் வினோத். மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை பற்றியும், அவர்களின் பின்னணி குறித்தும் நகைச்சுவை உணர்வோடு சுவாரசியமாக கதை எழுதி பலரது பாராட்டையும் அவர் பெற்றார். இப்போது வரை தமிழ்நாட்டில் எங்கு மோசடி சம்பவங்கள் நடந்தாலும், அதனை சதுரங்க வேட்டை படத்துடன் ஒப்பிட்டு தான் பலரும் கூறுவார்கள்.

அந்த அளவுக்கு அந்த திரைப்படம் ஜனங்களின் மனதில் ஒட்டிப் போனது. இது மட்டுமல்லாமல் படத்தில் கூர்மையான வசனங்களை எழுதியும் பலரை யோசிக்க வைத்திருந்தார் ஹெச் வினோத். இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் படத்தை அவர் இயக்கியிருந்தார். உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

- Advertisement -

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே நேர் கோட்டில் பயணித்த கதை, ரசிகர்களை சுவாரஸ்ய படுத்தும் வகையில் அமைந்தது. வட மாநில கொள்ளையர்களின் வாழ்க்கையையும், அவர்களைத் தேடி சென்று பிடிக்கும் போலீசாரின் துணிச்சலையும் தீரன் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

இதன்பிறகு பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்துடன் இணைந்தார் எச் வினோத். ஆனால் முதல் படத்திலேயே பிங்க் படத்தை அவர் ரீமேக் செய்ததால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். சதுரங்க வேட்டை, தீரன் என அருமையான படங்களை கொடுத்த இயக்குனரிடம், எதற்கு ரீமேக் படம் போய் சேர்ந்தது என்றும் கேள்வி எழுப்பினர். இதனிடையே பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இதன் பிறகு அஜித் வினோத் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் தோல்வியை தழுவ, மூன்றாவது முறையாக இருவர் கூட்டணியில் துணிவு படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது எச் வினோத், கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இந்த நிலையில் நேற்று வினோத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அவரைப் பற்றி ஒரு கருத்தை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் சரவணன் கூறியிருக்கிறார். இணையத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாவது,

துணிவு படம் ரிலீஸ் ஆனபோது சபரிமலையில் இருந்தோம். அப்போது ஒரு அறையில் வினோத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வினோத்தை எழுப்பி, துணிவு படத்தை கழுவி ஊத்துவதாக கூறினேன். ஊத்தட்டும் விடுயா என்று படுத்துக்கொண்டார். நண்பா படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க என்று திரும்பி கூறினேன். சரியா என்று தூக்கத்திலேயே பதில் கூறினார். “நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத் என சரவணன் கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்