- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அர்ஜூன் நடித்த அந்த மாஸ்ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான், பல ஆண்டுகளுக்கு...

நடிகர் அர்ஜூன் நடித்த அந்த மாஸ்ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான், பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகர் சரத்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் முன்னணி நடிகர்களில் ஒருவராக கடந்த 1990களில் இருந்தவர். கார்த்திக், அம்பிகா நடித்த கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்த சரத்குமார், புலன் விசாரணை படத்தில் டாக்டர் கேரக்டரில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார். பிறகு கேப்டன் பிரபாகரன் படத்திலும் தனது நண்பர் கேரக்டரில் அவரை விஜயகாந்த் நடிக்க செய்திருந்தார்.

ராஜா கைய வெச்சா படத்தில் வில்லனாக சரத்குமார் நடித்திருந்தார். தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார் கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிறகு பெரிய கவுண்டர் பொண்ணு கட்டபொம்மன் ஆதித்யன் படங்களை தொடர்ந்து சூரியன் நாட்டாமை சூரியவம்சம் போன்ற படங்களால் முன்னணி நடிகராக மாறினார்.

- Advertisement -

சரத்குமார் நடிகராக பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். ஆனால் சினிமாவில் புகழ் பெற்ற அளவுக்கு அரசியலில் அவரால் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற முடியவில்லை.

இந்நிலையில் சரத்குமார் நடித்த தி ஸ்மைல் மேன் என்ற அவரது 150வது படம், கடந்த 27ம் தேதி வெளியானது இந்த படத்தில் நினைத்திறன் மறதி கொண்ட போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். இதே போலீஸ் போர்த்தொழில் படத்திலும் அவரது போலீஸ் அதிகாரி கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் ஜெண்டில்மேன். கடந்த 1993ம் ஆண்டில் வெளியான இந்த படம்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல்படம். இந்த படத்தில் அர்ஜூன் மதுபாலா கவுண்டமணி செந்தில் அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

மாபெரும் வெற்றிப்படமாக ஜெண்டில் மேன் அமைந்தது. இது ஷங்கர், அர்ஜூன் திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை தந்த படமாகவும் இருந்தது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான். போட்டோ ஷூட் எல்லாம் நடந்தது. ஆனால் அந்த நேரத்தில் வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அர்ஜூன் நடித்தார். என் கேரியரில் நான் மிஸ் செய்த படம்தான் ஜெண்டில்மேன் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்