உலகத் தமிழர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப் பொங்கல் பண்டிகை. பராம்பரியம் மிக்க இந்த தைப் பொங்கல் திருநாளை தமிழ்நாட்டில் மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்வது ஆண்டுதோறும் வழக்கம். வருகிற 13ம் தேதி போகியுடன் பொங்கல் விழா துவங்குகிறது.
வருகிற 14ம் தேதி தை மாதம் பிறக்கிறது. அன்று தைப் பொங்கல் கொண்டாட்டம், அடுத்த நாள் 15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் என இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
தைப் பொங்கல் புதிய ரிலீஸ் படங்களாக ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் பாலா இயக்கிய வணங்கான் மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா சிபிராஜ் நடித்த டென் ஹவர்ஸ் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யாமேனன் நடித்த காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.
அதனால் இந்த முறை தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த 2024ம் ஆண்டில் பொங்கலுக்கு அயலான் கேப்டன் மில்லர் மிஷன் சேப்டர் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் என்ற 4 படங்களே வந்தன. இந்த முறை 10க்கும் மேற்பட்ட படங்கள் வரிசை கட்டி வரப்போகின்றன.
இந்நிலையில் டிவி சேனல்களில் பண்டிகை கால படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டில் வெளியான சில முக்கிய படங்கள் டிவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளன. அதுவும் ரஜினி விஜய் படங்களும் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பது ரஜினி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த முறை பொங்கலுக்கு ரஜினி விஜய் படங்கள் ரிலீஸாகவில்லை.
பொங்கல் பண்டிகை சிறப்பு திரைப்படங்களாக வரும் 14ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஜெயம் ரவி நடித்த பிரதர் படம், மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த தி கோட் படம் ஜீ தமிழ் சேனலில் வருகிறது. ஜனவரி 15ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு டிமாண்டி காலனி 2 படம் ஜீ தமிழ் சேனலில் வருகிறது. சன்டிவியில் கவின் நடித்த பிளடி பெக்கர் படம் வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கும், அன்று மாலை 6.30 மணிக்கு ரஜினி நடித்த வேட்டையன் படமும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் ஜனவரி 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, 15ம் தேதி மாலை 6 மணிக்கு மெய்யழகன் படமும் ஒளிப்பரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





