- Advertisement -
Homeபொழுதுபோக்குவீடியோ: தமன்னா கொஞ்சம் ஓரம் போங்க.. காவாலாவுக்கு ராஜமாதா ரம்யாகிருஷ்ணனின் ஆட்டத்தை பாருங்க

வீடியோ: தமன்னா கொஞ்சம் ஓரம் போங்க.. காவாலாவுக்கு ராஜமாதா ரம்யாகிருஷ்ணனின் ஆட்டத்தை பாருங்க

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் உருவாகியிருக்கிறது. ரஜினிகாந்த், மோகன் லால்,சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், யோகிபாபு, விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. ரஜினி மற்றும் நெல்சன் திலீப்குமா இந்தப் படத்தை ரொம்பவே பார்த்து பார்த்து செதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ரஜினி காகம், பருந்து கதையை சொல்லி அப்ளாஸை அள்ளினார். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று நான் பல வருடங்களுக்கு முன்னரே சொன்னேன் என்றுன்; நான் யாருக்கும் பயப்படமாட்டேன் நல்லவர்களுக்கும், தெய்வங்களுக்கும் மட்டும்தான் பயப்படுவேன் எனவும் பேசியிருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் முட்டிக்கொண்டிருக்க ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு அந்தப் பஞ்சாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. ரஜினி குட்டி கதை சொன்னது போல் லியோ இசை வெளியீட்டு விழாவில் எங்கள் தளபதியும் குட்டி கதை சொல்லி ரஜினிக்கு பதிலடி கொடுப்பார் என ரசிகரக்ள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இதற்கிடையே ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக படத்திலிருந்து காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகியிருந்தன. மூன்று பாடல்களுமே வரவேற்பை பெற்றாலும் முதலில் வெளியான காவாலா பாடல் தமன்னாவால் இன்னமும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தமன்னா இப்போது எந்த மேடை ஏறினாலும் அந்தப் பாடலின் ஸ்டெப்பை சில நொடிகளாவது போட்டுவிடுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். அவருடன் இன்னும் இரண்டு பெண்கள் நடனம் ஆடுகின்றனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமன்னா கொஞ்சம் ஓரமா போங்க எங்க ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் செமயா டான்ஸ் ஆடியிருக்கார் என கூறி ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

முன்னதாக ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிக்கொண்டிருக்கும்போது மேடை ஏறிய ரம்யா கிருஷ்ணன், வயசானாலும் அழகும் ஸ்டைலும் போகல என்ற படையப்பா வசனத்தை பேசினார். மேலும், தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கு படையப்பா படம் மட்டும்தான் காரணம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்