- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அப்படி செஞ்சா நடிக்கறேன்னு சொன்னேன், காதலிக்க நேரமில்லை டைரக்டர் கிருத்திகா உதயநிதி குறித்து விமர்சித்த...

நான் அப்படி செஞ்சா நடிக்கறேன்னு சொன்னேன், காதலிக்க நேரமில்லை டைரக்டர் கிருத்திகா உதயநிதி குறித்து விமர்சித்த நடிகர் ஜெயம் ரவி!

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடிகை நித்யாமேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் வருகிற 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. கிருத்திகா உதயநிதி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இவர் துணை முதல்வர் உதயநிதியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி, காதலிக்க நேரமில்லை படம் குறித்து கூறியதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை என்னிடம் கிருத்திகா உதயநிதி சொல்லிவிட்டார். பெண் இயக்குனர் என்பதால் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எனக்கு தெரியும். அவரிடம் ஒண்ணே ஒண்ணுதான் நான் கேட்டேன்.

- Advertisement -

எனக்கு அதிகமா வேண்டாம். கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனா 60க்கு 40 என்பதை 50க்கு 50 ஆக மாற்றி, எனக்கு ஈக்குவல் முக்கியத்துவம் தந்தால் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றுதான் சொன்னேன். அவரும் நான் சொன்னதை புரிந்துக்கொண்டார்.

சரி அதற்கேற்ப கதையை சரி செய்கிறேன் என்று சொன்னார். நீங்க கேட்டீங்க என்பதற்காக கதையை மாற்ற முடியாது. இயல்பா எப்படி செய்ய முடியுமோ அப்படி சரி செய்றேன் என்று கிருத்திகா சொன்னார். அதற்கு பின் வேறு சில படங்களில் அவர் கவனம் செலுத்தினார். 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த படத்தை ஆரம்பிக்க முடிந்தது.

- Advertisement -

வழக்கமாக கதை மாதிரி இது இல்லே. இந்த படத்தில் எனக்கு பைட் இல்லே. வழக்கமான படமாக இது இல்லை. 22 வருஷமா சினிமாதுறையில் இருக்கிற எனக்கு சில விஷயங்கள் மைண்ட் புட்ல இருந்து தானாக வரும். ஆனா அதை மாத்தி வேறுவிதமாக இந்த படத்தில் என்னை இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார்.

இதனால் என் நடிப்பில் வித்யாசம் வந்தது. எனக்கே மானிட்டரில் பார்க்க புதுசாக தெரிந்தது. இதை என் அடுத்த படங்களில் பயன்படுத்த நான் நினைக்கிறேன். கிருத்திகா ஒன்டர்புல் டைரக்டராக வருவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருப்பார். அதே நேரத்தில் ஷாட் சரியாக வரவேண்டும் என்பதிலும் அதிக கவனமாக இருப்பார் என்று ஜெயம் ரவி அந்த நேர்காணலில் கிருத்தி உதயநிதி குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்