- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இவரும் இருக்கிறாரா? வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோர் என்ன கேரக்டரில் வருகிறாா் தெரியுமா? -...

அட இவரும் இருக்கிறாரா? வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோர் என்ன கேரக்டரில் வருகிறாா் தெரியுமா? – போட்றா வெடிய, தரமான சம்பவம்தான்

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்கள் என ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிக படங்களில் நடிப்பதில்லை. குறிப்பிட்ட படங்களில், குறிப்பிட்ட கேரக்டரில் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் அந்த நடிப்பு அவர்களை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும். அவர்கள் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை, சில படங்களில் நடித்தாலும் அவர்களது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில்ம் பேசப்படும்.

அவர்களில் ஒருவர்தான் நடிகர் கிஷோர். பொல்லாதவன் படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் கிஷோர் அறிமுக நடிகராக நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது யதார்த்தமான நடிப்பும், அழுத்தமான பேச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் ரவுடிகளின் தலைவனாக அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து வனயுத்தம், வெண்ணிலா கபடிக் குழு, ஆடுகளம், உதயம் என்எச் 4 சார்பட்டா பரம்பரை, பொன்னியின் செல்வன், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் கிஷோர் நடித்துள்ளார். காந்தாரா படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள வேட்டையன் படத்திலும் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் என்கவுன்டர் ஆபீஸராக வருகிறார். கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன்,, ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

- Advertisement -

வேட்டையன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்யும் வீடியோக்களை கடந்த சில தினங்களாக வேட்டையன் படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி போன்றவர்களின் அறிமுக வீடியோக்கள் ஏற்கனவே வந்து வைரலாகி விட்டன.

அவற்றைத் தொடர்ந்து தற்போது நடிகர் கிஷோர் அறிமுக வீடியோ வந்துள்ளது. இந்த வீடியோவில் ஹரீஷ் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக கிஷோர் நடித்திருக்கிறார். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி நடந்த நிலையில், வருகிற அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இப்போது ஹரிஷ் என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கிஷோர் அறிமுக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்