- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டிஜிட்டல் சாட்டிலைட் வியாபாரத்தில் ரூ. 50 கோடி சம்பாதித்த திரில்லர்...

தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டிஜிட்டல் சாட்டிலைட் வியாபாரத்தில் ரூ. 50 கோடி சம்பாதித்த திரில்லர் படம் – ஏலே… இது வேற லெவல் சம்பவம்லே!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமான சண்டை காட்சிகள் காதல் காட்சிகள் குடும்ப சென்டிமென்ட் காமெடி தவிர்த்து இதுபோன்ற விறுவிறுப்பான திகில் படங்களை காண்பதிலும் ஒரு தரப்பு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதனால் தான் காமெடி காதல் படங்களை தந்து வரும் இயக்குனர் சுந்தர் சி கூட அவ்வப்போது அரண்மனை சீரிஸ் திகில் படங்களை தந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அதே போல் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ்சும் காஞ்சனா சீரிஸ் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெயின்மென்ட் தந்து வருகிறார்.

- Advertisement -

அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தரும் திகில் படங்களும் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் டிமான்டி காலனி. அருள்நிதி ரமேஷ் திலக் யோகிபாபு எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த ஹாரர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் அபார வெற்றியை பெற்றது.

அதன்பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு டிமாண்ட் காலனி படத்தின் 2ம் பாகம் கடந்த 2024ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் பிரியா பவானி ஷங்கர் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படம் உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. டிமான்டி காலனி டிமான்டி காலனி 2 படங்களின் அபார வெற்றியைத் தொடர்ந்து 3ம் பாகம் படம் உருவாக திட்டமிடப்பட்டது.

- Advertisement -

டிமாண்டி காலனி 3 படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் டிமான்டி காலனி 3 படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திலும் நாயகனாக அருள்நிதி தான் நடித்துள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டு மைண்ட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் வருகிற மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிமாண்டி காலனி 3 ரிலீஸ் ஆவதற்கு முன்பே வியாபாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலித்து விட்டது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை டீ சீரியஸ் சவுத் நிறுவனம் மற்றும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜி5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆடியோ ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் வாயிலாக படம் ரிலீஸாகும் முன்பே டிமாண்டி காலனி 3 படம் அபார லாபத்தை அடைந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்