- Advertisement -
Homeபொழுதுபோக்குஈகோவால் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்ட மைக் மோகன், இவரை போய் பகைச்சுக்கிட்டாரே - ஏறி வந்த...

ஈகோவால் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்ட மைக் மோகன், இவரை போய் பகைச்சுக்கிட்டாரே – ஏறி வந்த ஏணியை இப்படி மறக்கலாமா?

- Advertisement -

கடந்த 1980ம் ஆண்டுகளில், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். பல படங்களில் மைக் பிடித்து பாடியதால், இவருக்கு பெயரே மைக் மோகன் என்றாகி விட்டது. இவரது பல படங்கள் வெள்ளிவிழா படங்கள் என்பதால், இவருக்கு வெள்ளிவிழா நாயகன் என்ற பெயரும் உண்டு.

நடிகர் கமலை போன்ற அழகான தோற்றம் கொண்டவர் என்பதால், பெண் ரசிகைகள் அதிகம். 1980களில் கமல் இந்தி, மலையாள படங்களில் அதிகமாக நடித்ததால், தமிழில் மோகன் காதலை மையப்படுத்திய படங்களில் நடித்து காதல் நாயகனாக வலம் வந்தார். எந்த நடிகையுடன் நடித்தாலும் கிசுகிசுக்கப்படுவார். ஆனால், பெரிய அளவில் சர்ச்சை இருக்காது.

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த நடிகர் மோகனுக்கு தமிழ் பேச வராது. அவருக்கு தமிழ் தெரியாது என்றே பலருக்கும் இதுவரை தெரியாது. ஆனால், அவர் திரைப்படங்களில் மிக அழகான குரலில், தெளிவான உச்சரிப்பில் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசுவார். உண்மையில் அது அவரது குரல் அல்ல.

நடிகர் மோகனுக்கு பின்னணி பேசியவர் பின்னணி பாடகர் எஸ்என் சுரேந்தர். நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரின் சொந்த சகோதரர். அவரது டப்பிங் குரல், மோகனுக்கு அப்படியே பிசிறு தட்டாமல் ஒத்துப்போனது. அது அவரது சொந்தக் குரல்தான் என நினைக்கும் அளவுக்கு, எஸ் என் சுரேந்தர், மோகனின் குரலாகவே மாறிப்போனார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில், நடிகர் மோகனின் சினிமா வெற்றிக்கு, பின்னணி பேசிய எஸ்என் சுரேந்தர் ஒரு காரணம் என்ற பேச்சு பரவியது. இதனால் கடுப்பான மோகன், அவர் எனக்கு பின்னணி பேச வேண்டாம் என சொந்தக்குரலில் பேசி நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் சரிவை சந்திக்க துவங்கினார். அப்படியே படிப்படியாக மார்க்கெட் இழந்து, பின்னணிக்கு வந்துவிட்டார் மோகன்.

இந்த சூழலிலும், நடித்தால் ஹீரோவாகவே நடிப்பேன் என அடம்பிடித்த மோகனுக்கு படவாய்ப்புகளே இல்லாத நிலை ஏற்பட்டு, பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். எஸ்என் சுரேந்தருடன் மோதல், ஹீரோ ஈகோ மட்டும் தவிர்த்திருந்தால், மோகன் இன்னும் பல உயரங்களை அடைந்திருக்க முடியும். இப்போது மீண்டும் விஜய் 68 படம் மூலம் ரீ என்ட்ரி தருகிறார் மைக் மோகன்.

- Advertisement -

சற்று முன்