- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக மறுக்கிறாரா விஜய் பட நடிகர்? ஆஹா இவர் நடிப்பு வேற லெவல்ல...

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக மறுக்கிறாரா விஜய் பட நடிகர்? ஆஹா இவர் நடிப்பு வேற லெவல்ல இருக்குமே. அப்போ விசுவல் ட்ரீட் கன்பார்ம்

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க அஜித் தற்போது தயாராகி வருகிறார். இத்திரைப்படத்திற்காக அஜித்தும் இயக்குனர் மகிழ் திருமேனியும் வெளிநாட்டிற்கு லுக் டெஸ்ட்டிற்காக சென்று திரும்பியுள்ளனர். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பூனேவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பூனேவில் சண்டை காட்சிகளை படமாக்க மிகப்பெரிய செட் ஒன்று போடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளிவருகிறது. த்ரிஷா இதற்கு முன்பு “ஜீ”, “கிரீடம்”, “மங்காத்தா”, “என்னை அறிந்தால்” ஆகிய திரைப்படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தின் மூலம் மீண்டும் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் விஜய் பட நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். அதாவது விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் “விடாமுயற்சி” திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

- Advertisement -

அர்ஜூன் தாஸின் கனீர்  குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. மேலும் பல திரைப்படங்களில் மிக சிறப்பாக நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் அஜித்திற்கு டெரரான வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

“விடாமுயற்சி” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். நிரவ் ஷா இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் தனது பரஸ்பர மரியாதை பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்