- Advertisement -
Homeபொழுதுபோக்குவாரிசு படத்தை தொடர்ந்து கேம் சேஞ்சர் படமும் கொடுத்த பலத்த அடி - நஷ்டமடைந்த தயாரிப்பாளர்...

வாரிசு படத்தை தொடர்ந்து கேம் சேஞ்சர் படமும் கொடுத்த பலத்த அடி – நஷ்டமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு இப்படி ஒரு இழப்பா?

- Advertisement -

ஒரு திரைப்படம் உருவாக முதுகெலும்பாக இருப்பது இயக்குனரோ, ஹீரோவோ, இசையமைப்பாளரோ அல்ல… அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்தான். ஒரு படத்தை உருவாக்க தயாரிப்பாளர் முன்வந்தால் மட்டுமே இயக்குனரின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் காட்சிகளாக மாறி, தியேட்டர்களில் ரசிகர்களின் பார்வைக்கு திரைப்படமாக வரும்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜூ. இவர் வினியோகஸ்தராகவும், தியேட்டர் உரிமையாளராகவும் வோலிவுட் சினிமாவில் முக்கிய மனிதராக இருக்கிறார். இவரது தயாரிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது. இப்போது ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் ரிலீஸாகி உள்ளது.

- Advertisement -

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் புஷ்பா 2. இதுவரை 1850 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் 2000 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. அந்தளவுக்கு இன்னும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால் கேம் சேஞ்சர் படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் முதல் நாளில் 80 கோடி ரூபாய் 2வது நாளில் 45 கோடி ரூபாய் என மொத்தமே ரூ. 125 கோடி தான் வசூலித்துள்ளது. புஷ்பா 2 படம் அளவுக்கு மாஸ் ஹிட்டாக இருக்கும் என்று சொல்லப்பட்ட இந்த படம், தியேட்டர்களில் காற்று வாங்குகிறது. இது கேம் சேஞ்சர் அல்ல, கேம் டேஞ்சர் கேம் ஓவர் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே விஜய் நடித்த வாரிசு படம் மூலம் பலத்த நஷ்டத்தை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படம் போதிய வரவேற்பை பெறாத காரணமாகவும் பலத்த நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார். அவருக்கு சொந்தமான பிரமாண்ட சொகுசு பங்களாவை பைனான்ஸ்சில் அடகு வைத்து கேம் சேஞ்சர் படத்தை தயாரித்த நிலையில், பலத்த நஷ்டம் காரணமாக அந்த ஆடம்பர பங்களாவை அவர் இழந்து விட்டார். அந்த பங்களாவை பைனான்ஸியர் எடுத்துக் கொண்டனர்.

வாரிசு படத்தில் விஜய், சரத்குமார், ஷ்யாம் வீடாக காட்டப்படும் அந்த ஆடம்பர பங்களா, தில் ராஜூவுக்கு சொந்தமானது. அதனால் வாரிசு படத்தின் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. மேலும் கேம் சேஞ்சர் படத்திலும் ஒரு பாடல் காட்சி அந்த பங்களா முன்புதான் ஷெட் போட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. இப்போது கேம் சேஞ்சர் தந்த பலத்த நஷ்டத்தால் அந்த பங்களாவை பைனான்ஸியர்களிடம் தில் ராஜூ இழந்து விட்டதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்