நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஒரு ஹீரோவுக்கான லட்சணங்களுடன் அழகாவும் இளமையாகவும் காட்சி தருபவர். சண்டைக்காட்சி, நடனம், நடிப்பில் தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கின்றன.
குறிப்பாக கோமாளி படத்துக்கு பிறகு ரவி மோகன் நடித்த படங்கள் எதுவுமே எடுபடவில்லை. பூமி இறைவன் அகிலன் சைரன் 108 சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான பிரதர் படம் வரை தொடர்ந்து பிளாப் படங்களாகவே ரவி மோகனுக்கு அமைந்தது.
நடிகர் விஷால் நடிகர் சூர்யா போலவே நடிகர் ரவி மோகனுக்கும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தோல்வியான படங்களாக இருந்து வருகின்றன. இதற்கிடையே அவர் தன் காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து, குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கேட்டு மனுதா்ககல் செய்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த சூழலில் 2 தினங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரவி மோகன், இதுவரை தனது பெயர் ஜெயம் ரவி என்று இருந்த நிலையில், இனிமேல் ரவி மோகன் என அனைவராலும் அழைக்கப்பட வேண்டும். எனக்கு ஜெயம் வேண்டாம். ரவி மோகன் என்றே அழையுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அவர் முதலில் அறிமுகமான படம் ஜெயம். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். ஜெயம் ரவியாகவே பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இப்போது 4 படங்கள் தொடர் தோல்வி ஆனதால் ஜெயம் என்ற பெயரை நீக்க வேண்டுமா, அவரை ஜெயம் ரவி என்று சொன்னால்தான் தெரியும், ரவி மோகன் என்றால் அவரது ரசிகர்களுக்கே தெரியாது என்றும் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் ஜெயம் ரவி, நித்யாமேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி டைரக்ஷனில் உருவான காதலிக்க நேரமில்லை படம் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூ. 2கோடி மட்டுமே வசூலித்துள்ள இந்த படம், மெகா சீரியல் போல உள்ளது. படம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் விமர்சனம் வந்துள்ளது. சோண முத்தா, போச்சா ஜெயம் ரவி பெயரை மாற்றியும் தோல்வி மாறலையே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





