கடந்தாண்டில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படம் மகாராஜா. இது விஜய் சேதுபதி நடித்த 50வது படம். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய பின் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய 2வது படம். இந்த படத்தில் சலூன் கடை பார்பர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மம்தா மோகன்தாஸ் அபிராமி சாச்சனா சிங்கம்புலி தேனப்பன் முனீஷ்காந்த் நட்டி அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
கடந்தாண்டில் தமிழில் வெளியான படங்களில் ரூ. 100 கோடி வசூலித்த படங்களில் மகாராஜா படமும் ஒன்று. தொடர்ந்து தோல்வி படங்களை தந்த விஜய் சேதுபதிக்கு பெரிய வெற்றியை தந்து கம்பேக் கொடுத்த படமும் மகாராஜா படம்தான். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. 2 கோடி பேர் வரை இந்த படத்தை பார்த்த வகையில், பெரிய லாபம் ஓடிடி தளத்துக்கு கிடைத்தாக கூறப்பட்டது. சீனாவில் வெளியான மகாராஜா படம் அங்கும் பெரிய அளவில் வெற்றி பெற்று ரூ. 90 கோடி வரை வசூலித்தது.
இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தியில் பிரபல நடிகராக, இயக்குனராக உள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள் லியோ படங்களை தொடர்ந்து மகாராஜா படத்திலும் நடித்திருந்தார். நடிப்பில் இவர் ஒரு அசகாய சூரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அனுராக் காஷ்யப் மகள் திருமணம் மும்பையில் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கலந்துக்கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அனுராக் காஷ்யப் மிக முக்கியமான தகவல் ஒன்றை, நித்திலன் சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சொன்ன நித்திலன் சுவாமிநாதன், மும்பையில் அனுராக் காஷ்யப் மகள் திருமண விழாவில், அவரை நேரில் சந்தித்தேன். அப்போது பேசிய அனுராக் காஷ்யப், ஒரு விஷயத்தை சந்தோஷமாக சொன்னார். என்னை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் அலெஜாண்ட்ரோ, அவர் அடுத்து இயக்கும் ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார். அதற்கு காரணம் மகாராஜா படம்தான். அந்த படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு, அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார், என்று கூறியதாக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.





