- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படுதோல்விக்கு பிறகும் இயக்குனர் ஷங்கர் திருந்தலையே… கேம் சேஞ்சர் படத்தில் இப்படி ஒரு...

இந்தியன் 2 படுதோல்விக்கு பிறகும் இயக்குனர் ஷங்கர் திருந்தலையே… கேம் சேஞ்சர் படத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர், ஜெண்டில் மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. அது அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் வரை தொடர்கிறது. இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.

ஆனால் புஷ்பா 2 படம் அளவுக்கு வசூலில், ரசிகர்கள் வரவேற்பில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. 5 நாட்களில் மொத்தமே 180 கோடி ரூபாய்தான் இந்த படம் வசூலித்துள்ளது. தமிழில் வெளியான கேம் சேஞ்சருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 படமும் மிக பிரமாண்டமாக உருவான படமாக இருந்தது. லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் ஷங்கர் மற்றும் கமலை நம்பி இந்த படத்தை தயாரித்தது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதில் எஸ்ஜே சூர்யா வீடு செட்டுக்காக மட்டும் ரூ. 8 கோடியை செலவழித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

அதே போல், இப்போது வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திலும் 5 பாடல்களுக்காக மட்டும் ஷங்கர் செய்த மொத்த செலவு ரூ. 75 கோடி ரூபாய். ஆனால் அதில் நியூஸிலாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் படத்தில் இடம்பெறவே இல்லை. இந்த பாட்டை எதிர்பார்த்து படம் பார்க்க சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

அதுமட்டுமின்றி, கேம் சேஞ்சர் படத்தில் மொத்த படத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கும் மேலான படக்காட்சிகளை இயக்குனர் ஷங்கர் நீக்கியுள்ளார். இதில் பல நல்ல காட்சிகளும் தூக்கி எறியப்பட்டதாக இயக்குனர் ஷங்கரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இப்படியும் ஒரு இயக்குனர் தயாரிப்பாளர் பணத்தை வீணடிக்கலாமா என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

அந்தளவுக்கு 2 மணி நேரத்துக்கு மேல் கூடுதல் காட்சிகளை எடுத்த ஷங்கர் கேம் சேஞ்சர் 2ம் பாகமாக தந்திருக்கலாம். ஒரு பாட்டுக்கே 15 கோடி ரூபாய் செலவு செய்தவர், வெட்டி தூக்கி எறியப்பட்ட அந்த காட்சிகளுக்காக எத்தனை கோடிகளை வீணடித்திருக்கிறார், இவரை நம்பிய தயாரிப்பாளர் நிலமை என்ன, இந்தியன் 2 படுதோல்விக்கு பிறகும் இயக்குனர் ஷங்கர் திருந்தவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்