நடிகர் விஜய் இப்போது தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை சதுரங்க வேட்டை வலிமை துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். மிகவும் நல்ல படைப்புகளை தரும் இயக்குனர் என்பது அவரது முந்தைய படங்களே சொல்கின்றன.
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந் கேசரி என்ற படத்தின் தழுவல்தான் இந்த படம் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு சண்டைக்காட்சி பகவந் கேசரி படத்தில் இருந்தது போலவே செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வைரலானது.
விஜயை பொருத்த வரை அவரது பெரும்பாலான படங்கள் தெலுங்கில் வெளியான ஹிட் படங்களில் தழுவல்தான் என்பதும் பலமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படம்தான் தமிழில் கில்லி என்ற பெயரில் உருவாகி விஜய்க்கு பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது.
இப்போது உருவாகி வரும் தளபதி 69 படத்தில் விஜயுடன் வில்லனாக பாபி தியோல் மோதுகிறார். மேலும் பிரகாஷ் ராஜ் நரேன் கௌதம் மேனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் 2வது முறையாக பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய்க்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் மமிதா பைஜூ நடிக்கிறார்.
பூஜா ஹெக்டே மமிதா பைஜூ ஆகியோருடன் முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் பிரியாமணியும் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுமையடையும் என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு விஜய் கட்சி பணிகளில் தீவிர செயல்பாடு காட்ட இருக்கிறார்.
இந்த சூழலில் வந்த முக்கிய தகவலின்படி இந்த படத்தில் நடிகை அபிராமியும் இணைந்திருக்கிறார். மிக முக்கியமான கேரக்டரில் அவரும் நடித்து வருகிறார். விருமாண்டி சார்லி சாப்ளின் மிடில்கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மாறா மதகஜ ராஜா வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது விஜய் படத்திலும் இணைந்துள்ளார்.





