- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68-ல் இணையும் ஜெய்... சூப்பர் ரோல் கொடுக்கும் வெங்கட் பிரபு... 21 ஆண்டுகளுக்குப் பிறகு...

தளபதி 68-ல் இணையும் ஜெய்… சூப்பர் ரோல் கொடுக்கும் வெங்கட் பிரபு… 21 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பந்தம்…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடித்துள்ளது.

கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜின் நேர்த்தியான திரைக் கதையால், லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், லோகேஷ் கனகராஜின் எல் சி யு கான்செப்ட், இந்த படத்திலும் இருக்குமா என்று நாளுக்கு நாள் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் பிறந்தநாளன்று நா ரெடி தான் பாடல் வெளியாகி செம ஹிட் அடித்தது. விஜயின் குரலில் உருவாகிய இந்த பாடலில், இரண்டு ஆயிரம் நடன கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். தொடர்ந்து சஞ்சய்தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்தோணி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக அப்டேட் வெளியானது. இது தொடர்பான சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.

அடுத்ததாக அர்ஜுன் பிறந்தநாளான ஆகஸ்ட் 15ஆம் தேதியை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் குறித்து அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி லியோ வெளியாகும் நிலையில் அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இதனிடையே விஜயின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்பது குறித்த கேள்வி, தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இந்த பட்டியலில் பல்வேறு இயக்குனர்கள் இடம் பிடிக்க, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து சேர்ந்தார் வெங்கட் பிரபு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீதை திரைப்படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

படத்தில் கதாநாயகியாக ஜோதிகாவும், வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய தகவலாக, தளபதி 68 படத்தில் நடிகர் ஜெய் இணைய போவதாக கூறப்படுகிறது. அண்ணனாக விஜயையும் தம்பியாக ஜெய்யும் நடிக்க இருக்கிறார்களாம். ஏற்கனவே இருவரும் அண்ணன் தம்பியாக பகவதி திரைப்படத்தில் நடித்தனர். தற்போது மீண்டும் 21 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைய போவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்