- Advertisement -
Homeபொழுதுபோக்குசொல்லி அடித்த கில்லியாக சதம் விளாசிய தெலுங்கு ஹீரோக்கள், பலத்த தோல்வியை சந்தித்த கேம் சேஞ்சர்...

சொல்லி அடித்த கில்லியாக சதம் விளாசிய தெலுங்கு ஹீரோக்கள், பலத்த தோல்வியை சந்தித்த கேம் சேஞ்சர் ராம்சரண் – பிரமாண்டம் கை கொடுக்கலையே?

- Advertisement -

நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இயக்கிய இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.

இந்த படத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரணும், என்டிஆர் மகன் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து ராம்சரண் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் கேம் சேஞ்சர். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார்.

- Advertisement -

தயாரிப்பாளர் தில் ராஜூ ரூ. 450 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தார். தமன் இசையமைத்து இருந்தார். கியாரா அத்வானி அஞ்சலி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 10ம் தேதி வெளியானது. முதல் நாளிலேயே ரூ. 186 கோடி வசூல் என்று தகவல் வெளியான நிலையில், அது 80 கோடி ரூபாய்தான் என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்காக மட்டும் ரூ. 75 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரியதாக எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து பாடல் படத்தில் வரவில்லை. மேலும் 5 மணி நேர படத்தை 2.5 மணி நேரமாக படமாக ட்ரிம் செய்ததில் பல முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டதாக இயக்குனர் ஷங்கரே வெளிப்படையாக கூறியிருந்தார்.

- Advertisement -

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் பலத்த தோல்வியை சந்தித்துள்ளது. கேம் சேஞ்சர் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் இந்த படம் இன்னும் ரூ. 100 கோடியை கூட கடக்கவில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. பிரமாண்டம் இனி ரசிகர்களிடம் எடுபடாது என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையே வெங்கடேஷ் மீனாட்சி சௌத்ரி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான சங்கராந்தி வஸ்துனம் என்ற தெலுங்கு படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலில் கடந்துள்ளது. அடுத்து நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான டாகு மகாராஜ் என்ற படமும் 4 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்துள்ளது. ஆனால் கேம் சேஞ்சர், கேம் ஓவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு பின்னால் வெகுதூரம் போய்விட்டது.

- Advertisement -

சற்று முன்