- Advertisement -
Homeபொழுதுபோக்குதுபாயில் இருந்த போது 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு போட்டோ அனுப்பினேன் - அட...

துபாயில் இருந்த போது 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு போட்டோ அனுப்பினேன் – அட விஜய் சேதுபதி சொன்னது இந்த ஹிட் படங்களா?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை சீனு ராமசாமி டைரக்ட் செய்திருந்தார். இதில் விஜய் சேதுபதியின் அம்மா கேரக்டரில் சரண்யா பொன்வண்ணன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்காக அவருக்கு சிறந்த துணை நடிகை தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன், நடிகர் விஜய் சேதுபதி புதுப்பேட்டை வெண்ணிலா கபடிக்குழு சுந்தரபாண்டியன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட சில படங்களில் சில காட்சிகளில் வருவார். ஆனால் அவரது கேரக்டர் பெயர், டயலாக் கூட விஜய் சேதுபதிக்கு இருக்காது.

தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பிறகு சூது கவ்வும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பீட்சா பண்ணையாரும் பத்மினியும் ரம்மி உள்ளிட்ட படங்களில் நடித்த விஜய் சேதுபதி, முன்னணி நடிகராக ஒரு கட்டத்தில் மாறினார். இப்போது தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார்.

எனினும் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சில காட்சிகளில் தலை காட்டுவதே அறிமுக நடிகர்களுக்கு பெரிய போராட்டம்தான். ஆரம்பத்தில் விஜய் சேதுபதி துபாய்க்கு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணி செய்திருக்கிறார். அப்போதும் சினிமா ஆர்வத்தில் இருந்தது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

அதில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, நான் துபாயில் இருந்த போது 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு போட்டோ அனுப்பினேன். குருட்டாம் போக்குல, சினிமாவுல சேர்ந்தால் பெரிய நடிகராகி விடலாம் என்று அப்போது நான் நினைத்தேன். துபாயில் நான் வேலை செய்த போது, ஒரு வருஷம் ஜிம்முக்கு எல்லாம் போனேன். அப்போ நான் ரொம்பவும் ஒல்லியாக இருந்தேன்.

பாய்ஸ் பைவ் ஸ்டார் ஆகிய 2 படங்களில் நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேவை என்ற தகவல் கிடைத்தால், அந்த 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு போட்டோ அனுப்பினேன். இதை சித்தார்த்தை ஒருமுறை சந்தித்த போது சொன்னேன். இதுபற்றி பிரசன்னாவிடம் சொன்னேனா என தெரியவில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

சற்று முன்