- Advertisement -
Homeபொழுதுபோக்கு24 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் ஜோடி சேரும் மூத்த நடிகை... அசுர வேகத்தில் ஸ்கெட்ச் போடும்...

24 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் ஜோடி சேரும் மூத்த நடிகை… அசுர வேகத்தில் ஸ்கெட்ச் போடும் ஆதிக் ரவிச்சந்திரன்…

- Advertisement -

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது கிட்டத்தட்ட ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது உறுதியாகிவிட்டது. திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார் ஆதிக். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான அந்த திரைப்படம் மிகவும் சர்ச்சையை கிளப்பியது. அருவருக்கும் வகையில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், வசனங்கள் படுமோசமாக உள்ளது என்றும் பலர் விமர்சனங்களை எழுப்பினர்.

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இளைஞர்கள் மத்தியில் அந்த பெரும் ஆதரவு கொடுத்ததால் ஜிவி பிரகாஷ் நடித்த அந்த திரைப்படம் வெற்றி படமாகவே கருதப்பட்டது. இருப்பினும் இயக்குனர் என்ற முறையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, ஒரு சர்ச்சையான பிம்பத்தையே அந்த திரைப்படம் கொடுத்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை எடுத்தார் ஆதிக். மைக்கேல் ராயப்பன் என்பவர் இந்த படத்தை தயாரித்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அதன் தீம் மியூசிக் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இதை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்பார்ப்பில் அந்த திரைப்படம் வெளியான சூழலில், படு தோல்வியை சந்தித்தது.

படத்தில் காட்சிகள் எதுவும் ஒட்டவில்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் சிம்பு படப்பிடிப்புக்கு வராத காரணத்தால், அதன் வடிவமே மாறிவிட்டதாக பலரும் குற்றம் சாட்டினர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து எந்த வாய்ப்புகளும் வராததால் நீண்ட நாட்கள் பொறுமையாக இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த சமயத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

- Advertisement -

இதன்பிறகு பிரபுதேவாவை வைத்து பகீரா என்னும் திரைப்படம் எடுக்க, அதுவும் தோல்வி அடைந்தது. தொடர்ந்து விஷால் எஸ் ஜே சூர்யா செல்வராகவன் ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுத்தார் ஆதிக். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டைம் ட்ராவல் கதையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருந்தால் ஆதிக்கை பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில் தன்னை எப்போதும் அஜித் ரசிகர் என்று காட்டிக் கொள்ளும் அவர் தற்போது அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்க இயக்குகிறார். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக அஜித்திற்கு 300 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபுவின் நடிக்க வைக்க ஆதிக் முயன்று வருகிறாராம். ஏற்கனவே அஜித் – தபு கூட்டணியில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் ஜோடி சேர்வது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்