- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியை பார்க்க இந்த மனநிலையுடனே வாருங்கள்... அடக்கடவுளே என்ன மகிழ் திருமேனியே இப்படி சொல்லிட்டாரு...

விடாமுயற்சியை பார்க்க இந்த மனநிலையுடனே வாருங்கள்… அடக்கடவுளே என்ன மகிழ் திருமேனியே இப்படி சொல்லிட்டாரு…

- Advertisement -

அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா.

அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தின் நடித்திருக்கிறார்கள். தி பிரேக் டவுன் என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஹாலிவுட் தரத்திற்கு இதன் காட்சிகள் உள்ளதாக ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. காணாமல் போன தனது மனைவியை அஜித் கண்டுபிடிப்பது தான் இந்த திரைப்படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்பு வந்தது 2023 ஆம் ஆண்டு மே மாதம். ஆனால் ஐந்து மாதங்கள் கழித்து அக்டோபர் மாதம் தான் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சூட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, ஒட்டுமொத்தமாக வேலைகள் முடிக்க தாமதமானது. இப்படியான சூழலில் விடாமுயற்சி குறித்த பல்வேறு தகவல்களை இயக்குனர் மகிழ்திருமேனி பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசியதாவது, பலரும் விடாமுயற்சி திரைப்படம் எடுக்க நீண்ட நாட்கள் ஆனதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் 121 நாட்கள் மட்டும்தான் சூட்டிங் சென்றோம். சண்டைக் காட்சிகள் தவிர்த்து 68 நாட்கள் மட்டுமே மீதம் உள்ள காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜர்பைஜான் நாட்டின் காலநிலை தான் படப்பிடிப்பிற்கு தாமதம் ஏற்பட்டது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு என்று ஓபனிங் சீன் இருக்காது. பெரிய பில்டப் காட்சிகளும் வராது. இன்டர்வெல்லில் மிகப்பெரிய மாஸ் காட்சிகள் இருக்காது. இதனால் ஒரு திறந்த மனநிலையுடனே விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க வாருங்கள். நிச்சயம் இந்த திரைப்படம் உங்களை திருப்திப்படுத்தும். படத்தைப் பார்த்த அஜித் குமார் இந்த திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என எதிர்பார்க்கவில்லை என்று என்னிடம் கூறியிருந்தார் என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்