- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கா ரெட் கார்டு போடறீங்க? நிஜத்தில் ராயனாக மாறி விஸ்வரூபம் எடுத்த நடிகர் தனுஷ் -...

எனக்கா ரெட் கார்டு போடறீங்க? நிஜத்தில் ராயனாக மாறி விஸ்வரூபம் எடுத்த நடிகர் தனுஷ் – இப்ப என்ன பண்ணுவீங்க, இப்ப என்ன பண்ணுவீங்க…?

- Advertisement -

சமீபமாக மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். 3 தினங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராயன் படம் தனுஷூக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த படம் 3 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு சாதனை படைக்க உள்ளது.

தனுஷ் இப்போது தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க ரூ. 50 கோடி வீதம் 100 கோடி ரூபாய் சம்பளம் தனுஷூக்கு பேசப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையடுத்து நடிகர் தனுஷ் இன்னும் சில முக்கிய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்த சூழலில் நடிகர் தனுஷூக்கு தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த சில பஞ்சாயத்துகளின் காரணமாக இந்த ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. ஆனால் விஷாலை வௌிப்படையாக சொன்ன அளவுக்கு, தனுஷ் விவகாரம் வெளிச்சத்துக்கு வரவில்லை.

இப்போது தனுஷை வைத்து புதியதாக படம் கமிட் செய்து இயக்குபவர்களும், தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்கத்திடம் வந்து கலந்தாலோசித்து விட்டுதான் அவரது படங்களை இயக்கவும், தயாரிக்கவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு புதிதாக எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த விவகாரத்துக்கு சூப்பரான பதிலடி தந்து அசத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர்தான் நடிகர் தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்கிறார். அதாவது உதயநிதியின் மிக நெருங்கிய நண்பர் என்பதால், இந்த படத்தையே உதயநிதியே தயாரிப்பது போல தான் சினிமா இன்டஸ்ட்ரியில் பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்டு போட்டு தனுஷின் அடுத்த படத்துக்கு கடிவாளம் போட முடியாது. ஏனெனில் உதயநிதி ஸ்டாலினின் அதிருப்திக்கு ஆளாக, அவரது நண்பரை எதிர்க்க தயாரிப்பாளர் சங்கம் தயாராக இல்லை. அதனால் இந்த விவகாரத்தில் சத்தமே இல்லாமல், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரை உள்ளே கொண்டு வந்து, ரெட்கார்டு விவகாரத்துக்கு ராயன் ஸ்டைலில் அதிரடி ஆப்பு வைத்துவிட்டார் தனுஷ் என்று ரசிகர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்