- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தியை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் இணையப் போவது இந்த இயக்குனருடரா... அப்போ சிபி சக்கரவர்த்தி படம் என்ன...

பராசக்தியை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் இணையப் போவது இந்த இயக்குனருடரா… அப்போ சிபி சக்கரவர்த்தி படம் என்ன ஆச்சு…

- Advertisement -

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்தார். தெலுங்கின் முன்னணி நிறுவனமான லட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த பெருங்குளத்தூரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த திரைப்படத்தை எடுக்கும்போதே முருகதாஸுக்கு திடீரென பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து சல்மான் கானை வைத்து சிக்கந்தர் திரைப்படத்தை எடுக்கும் பணியில் இறங்கினார் முருகதாஸ்.

- Advertisement -

இதனால் சிவகார்த்திகேயன் உடனான திரைப்படத்தின் பணிகள் தள்ளிக் கொண்டே போகின்றன. சூட்டிங் வேலைகளுக்கே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதால் சிவகார்த்திகேயன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறினார்கள். இருப்பினும் இந்த திரைப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படமாக உருவாகி வரும் இதற்கு, இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அனேகமாக இது தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறுகிறார்கள். இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் தனது 25வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் சுதா கொங்கராவுடன் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க, அதர்வாவுக்கும் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் வில்லனாக ஜெயம் ரவி வருகிறார். 1965 ஆம் காலகட்டங்களில், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் போராடிய நிலையில் அதை தான் இந்த திரைப்படம் எடுத்துக் கூறுவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இணைவார்கள் என்று பலரும் தெரிவித்திருந்தார்கள்.

இப்படியான சூழலில் சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் அகமது கதை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மனிதன் என்றென்றும் புன்னகை மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் தான் அகமது. அவரது கதைக்கு தான் சிவகார்த்திகேயன் ஓகே சொல்லி இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே ரவி மோகனை வைத்து அகமது ஜன கன மன எனும் திரைப்படத்தை எடுக்க இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்றன. தற்போது அந்தக் கதைதான் சிவகார்த்திகேயனுக்கு சென்று இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்