இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டில் மார்ச் 31ம் தேதி வெளியான படம் விடுதலை. முதல் பாகமான வெளியான இந்த படத்துக்கு பெரிய பக்கபலமாக இருந்தது இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசைதான். அதிலும் வழிநெடுக காட்டுமல்லி பாடல், டிரண்டிங் ஆகி ரசிகர்களின் மனதை கொள்கை கொண்டது.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய விஷயமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதுவரை காமெடி நடிகராக இருந்த சூரி இந்த படத்தில்தால் கதையின் நாயகனாக நடித்திருந்தார். ஒரு அறிமுக நடிகர் போல அவரது நடிப்பு கனகச்சிதமாக இருந்தாலும், படத்தில் தீவிரவாதியாக வாத்தியார் கேரக்டரில் காட்டப்பட்ட விஜய் சேதுபதியின் படத்தின் உண்மையான ஹீரோ.
முதல் பாகத்தில் விஜய் சேதுபதியை கேமியோ ரோலில் காட்டிய வெற்றிமாறன், 2ம் பாகத்தில் சூரியை கேமியோ ரோலுக்கு மாற்றிவிட்டு, விஜய் சேதுபதியை படம் முழுவதும் வருமாறு செய்துவிட்டார். விடுதலை 2ம் பாகம் படத்திலும் இளையராஜா அடித்து விளையாடி இருக்கிறார் என்றாலும், படத்தின் கதை போராட்டகளமாக இருப்பதால் பலருக்கும் படம் ஏமாற்றம் தந்துவிட்டது.
விடுதலை முதல் பாகத்தில் போலீஸ் எஸ்பி கௌதம் மேனனுடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், 2ம் பாகத்தில் பண்ணையார் கேரக்டரில் நடித்திருக்கிறார். முதல் பாகம் போலீசாக உள்ள ஒரு கேரக்டர், 2வது பாகத்தில் பண்ணையாராக மாறியது எப்படி என்று படம் பார்த்த ரசிகர்கள் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விடுதலை 2 படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் உலகளவில் இதுவரை 46.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 33 கோடி ரூபாய் கடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த படம் எப்படியும் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ரஜினி கமல் விஜய் அஜீத் போன்ற நடிகர்களின் படங்கள் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலிக்கும் கமர்ஷியல் படங்களாக இருக்கின்றன. ஆனால் புரட்சி பேசும் விடுதலை போன்ற படங்களை வரவேற்க ரசிகர்கள் தயாராக இல்லை என்பதையே இந்த வசூல் நிலவரம் வெளிப்படையாக காட்டுகிறது. இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய அவல நிலை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.





