- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன தல தோனி இவ்வளவுதானா?.. எல்ஜிஎம்மில் இவானா சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. இவ்ளோ கம்மியா இருக்கே

என்ன தல தோனி இவ்வளவுதானா?.. எல்ஜிஎம்மில் இவானா சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. இவ்ளோ கம்மியா இருக்கே

- Advertisement -

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் பாலா. அவர் கடைசியாக இயக்கிய படம் நாச்சியார். ஜோதிகா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தில்தான் இவானா முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார்.கேரளாவை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் அந்தப் படத்தில் அச்சு அசல் தமிழ் பெண் போலவே இருந்தார். அதுமட்டுமின்றி தனது சிறந்த நடிப்பையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். பாலா என்ற பெரிய இயக்குநரின் படத்தின் மூலம் அறிமுகமானாலும் இவானாவுக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் அமையாமல் திண்டாடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் வந்தது பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த லவ் டுடே திரைப்படம்.

- Advertisement -

படம் சென்சேஷனல் ஹிட்டடித்தது. அதில் பிரதீப் ரங்கநாதனுக்கும், இவானாவுக்கு கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதேபோல் இவானாவின் நடிப்பும், அவரது வசன உச்சரிப்பு ஸ்டைலும் பக்காவாக ரசிகர்களுடன் கனெக்ட் ஆனது. படம் நூறு நாட்கள் ஓடியதை அடுத்து இவானாவுக்கு முதல் வெற்றி படமாக லவ் டுடே அமைந்தது. எனவே இனி தமிழில் பெரிய ரவுண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்கிறார்.

அவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் விதத்தில் தோனி தயாரித்த லெட்ஸ் கெட் மேரிட் என்ற படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டார். ஹரிஷ் கல்யாண்,நதியா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். தோனி எண்ட்டெர்டெயின்மெண்ட் என்ற பெரிய பேனரில் நடிப்பதால் நிச்சயம் இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் இவானா.

- Advertisement -

ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துப்போகும் விதமாக எல்ஜிஎம் படத்தின் ரிசல்ட் நெகட்டிவ்வாக அமைந்தது. இவானாவின் நடிப்பு நல்லபடியாக அமைந்தாலும் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் பல ஓட்டைகள் இருந்ததன் காரணமாக தோல்வி படமாக அமைந்திருக்கிறது. எனவே லவ் டுடே படம் ஏற்றிய கிராஃப் இந்தப் படத்தில் இறங்கிவிட்டதே என்ற கவலையில் இவானா இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் இவானாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்துக்காக அவருக்கு 32 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்,. இதனை கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.ஏனென்றால் லவ் டுடே என்ற மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்திருந்ததால் நிச்சயம் இதில் அவர் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தை ஃபிக்ஸ் செய்திருக்கலாம். ஆனால் ஏனோ அவர் 50 லட்சத்தை தொடவில்லையே என கூறிவருகின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்