நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக முன்னணியில் இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
அமரன் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மொழிப்போர் தியாகி கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீலீலா அதர்வா குரு சோமசுந்தரம் ரவி மோகன் ஜோசப் பசில் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
பராசக்தி படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. அதே நாளில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே வருகிற செப்டம்டர் 5ம் தேதி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் ரிலீஸாக உள்ளது.
கடந்தாண்டில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் கேமியோ ரோலில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அதில் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறி நடிகர் விஜய் அவரிடம் தனது துப்பாக்கியை தந்துவிடுவார். அன்று முதல் நடிகர் விஜய் இடத்துக்கு வரப்போகிறவர் சிவகார்த்திகேயன் தான் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும் ஒரு புளியையும் தத்தெடுத்துள்ளார். அதாவது ஸ்ரேயர் என்ற சிங்கத்தையும் யுகா என்ற புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
வரும் 3 மாதங்களுக்கு அந்த சிங்கம் மற்றும் புலியின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த தகவலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தனது அதிகாரபூர்வமான எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. விஜய் கொடுத்த துப்பாக்கியை எடுத்துட்டு வேட்டையாட கிளம்பாம இப்படி சிங்கம் புலியை எஸ்கே தத்தெடுத்துட்டு இருக்காரே என ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.





