- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடக்கடவுளே அஜித் படத்துக்கு இன்னும் அந்த விஷயமே நடக்கலையா... என்னடா இது சோதனை... அப்போ தள்ளிப்...

அடக்கடவுளே அஜித் படத்துக்கு இன்னும் அந்த விஷயமே நடக்கலையா… என்னடா இது சோதனை… அப்போ தள்ளிப் போகிறதா குட் பேட் அக்லி…

- Advertisement -

அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான சிறப்பு காட்சிக்கான அனுமதி இன்று தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காலை 9 மணி காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால், அதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படங்களை எடுப்பதில் மகிழ் திருமேனி கைதேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லர் என இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுபோக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நல்ல ரீச் ஆனதால் விடாமுயற்சி திரைப்படத்திற்கு ஒரு ஹைப் கிடைத்திருக்கிறது. திரிஷா அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்குமாருக்கு, குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருக்கிறார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரித்து இருக்கிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாவதாக தான் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் விடாமுயற்சி வெளியாகும் என்றும் முன்பே கூறப்பட்டதால் அதிலிருந்து பின்வாங்கியது.

- Advertisement -

மேலும், படப்பிடிப்பும் சற்று தாமதம் ஆகியதால், ரிலீஸ் தேதியை ஏப்ரல் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்தப் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார் அஜித்குமார். விடாமுயற்சியைப் போன்று இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க, சொன்ன தேதியில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. படத்தின் சேட்டிலைட் உரிமம் இன்னும் விலை போகவில்லையாம். இதனால் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இன்னொன்று ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் அடுத்தடுத்த இரண்டு அஜித் திரைப்படங்கள் வெளியாவது அந்த அளவு சரியாக இருக்காது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். அஜித் பிறந்த நாள் ஆன மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றும் சிலர் கூறி விடுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்