பார்த்தவுடன் மரியாதை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெண் கேரக்டர், குடும்பப் பாங்கான கேரக்டர் என்றால் 1990களில் முதலில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்தது நடிகை தேவயானி யைதான். அவரது முகமும் தோற்றமும் பிசிறு இல்லாத அழுத்தமான நடிப்பும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடினர்.
சூரிய வம்சம் கும்மிப்பாட்டு ப்ரண்ட்ஸ் தேடினேன் வந்தது நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் நிலவே முகம் காட்டு நினைத்தேன் வந்தாய் தொடரும் காதல் கோட்டை கிழக்கும் மேற்கும் மறுமலர்ச்சி ஆனந்தம் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தேவயானி.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த போதே, இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை தேவயானி திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான அவர் காதலில் விழுந்தேன் மாசிலாமணி தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நடிகை தேவயானி பல படங்களில் நடித்திருந்தாலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜெயராம் ரமேஷ் அரவிந்த் யூகிசேது ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்த பஞ்சதந்திரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
பஞ்சதந்திரம் படத்தில், ரமேஷ் அரவிந்த் காதலி நிர்மலா தேவி கேரக்டரில் நடித்த தேவயானி, ஒரு ஓட்டல் அறையில் இருப்பார். காதல் தோல்வியால் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். கமல் அவரை காப்பாற்ற அந்த அறைக்கு வருவார். அப்போது பாட்டல் மூடியை மாத்திரை என நினைத்து விழுங்கும் அந்த காட்சி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து நடிகை தேவயானி ஒரு நேர்காணலில் கூறியதாவது, பஞ்சதந்திரம் படத்தில் அந்த காட்சியில் நான் நடிக்க வேண்டும் என்று மிகவும் தயங்கி தயங்கி என்னிடம் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கேட்டார். ஒரே ஒரு சீன், அதுல நடிக்கறீங்களா, என்று கேட்டார். நான் உடனே ஓகே சொல்லி விட்டேன். இப்போதும் அந்த காட்சிக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. எல்லோருக்குமே பிடித்த சீன் அது. அந்த காட்சியில் நான் நடித்ததற்காக ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.





