இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 69வது படமான ஜனநாயகன் படத்திலும் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ பிரியாமணி அபிராமி ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
நடிகர் சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக பிளாப் படங்களை தந்துவரும் நடிகர் சூர்யாவுக்கு ரெட்ரோ படம் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் பிஸியாக இப்போது நடித்து வரும் பூஜா ஹெக்டே 12 ஆண்டுகளுக்கு முன், முதன்முறையாக நடிகையாக அறிமுகமானது தமிழ் சினிமாவில்தான். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் பூஜா ஹெக்டே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்போது மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 4 என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சியில் துவங்க இருக்கிறது.
சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே கூறுகையில், நான் நடித்த அல வைகுண்ட புறமுல்லோ என்ற தமிழ் படம் எனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் படம், மிகவும் முக்கியமான படமாகவும் அது எனக்கு இருந்தது என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்ன படம் தெலுங்கு படம் ஆனால் அவர் தமிழ் படம் என்று கூறியதற்கு தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தனர்.
தெலுங்குக்கும் தமிழுக்கும் வித்தியாசம் கூட தெரியாமலா இப்படி படங்களில் நடிக்கிறீர்கள் என்று அவரை இணையத்தில் ரசிகர்கள் ட்ரோல் செய்து கலாய்த்தனர். இதையடுத்து நான் சொன்னது தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள நடிகை பூஜா ஹெக்டே ஏதோ தவறுதலாக அப்படி சொல்லிவிட்டேன். தெலுங்கு சினிமாவுக்கு எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று தெரிவித்து தெலுங்கு ரசிகர்களிடம் ஸாரி சொல்லி சமாதானப்படுத்தி உள்ளார்.





