- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க உளவியல் குற்றப்போக்கு மாறணும்னா இதை பண்ணுங்க - கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்க்கு பாலிவுட்...

உங்க உளவியல் குற்றப்போக்கு மாறணும்னா இதை பண்ணுங்க – கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்க்கு பாலிவுட் நடிகை எம்பி கங்கனா ரெனாவத் சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

நடிகை கங்கனா ரெனாவத் பாலிவுட் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானவர். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துபவர். அதனால் அடிக்கடி விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார். குறிப்பாக முக்கிய அமைப்புகள் தரும் விருதுகளை இவர் விமர்சிப்பதோடு, விருது பெறும் கலைஞர்கள் குறித்தும் சர்ச்சையை கிளப்புவார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில், ஜெயலலிதா கேரக்டரில் தலைவி என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் அதிமுகவினர் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டில், பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

நடந்துமுடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரெனாவத் வெற்றி பெற்றார். இமாச்சல பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக தேர்வாகி உள்ள கங்கனா ரெனாவத் 2 தினங்களுக்கு முன், பஞ்சாப் மாநிலம் சண்டிகார் விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது அங்கு இருந்த சிஐஎஸ்எப் பெண் போலீஸ் குல்விந்தர் கவுர் கங்கனா ரெனாவத்தை கண்டபடி திட்டிய நிலையில், அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களை இழிவாக கங்கனா ரெனாவத் பேசியிருந்தார். அந்த கோபத்தில் அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து சமூக வலைதளங்களில் கங்கனா ரெனாவத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கங்கனா ரெனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கற்பழிப்பு செய்பவர், கொலைகாரன், திருடன் என எப்போதும் ஒரு குற்றத்தை செய்வதற்கு வலுவான உணர்ச்சி, உளவியல் என ஏதாவது காரணம் இருக்கும். எந்த குற்றமும் காரணமின்றி நடக்காது. ஆனாலும் குற்றவாளிகளாக, அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஒருவரை அவரது அனுமதியின்றி அவரது உடலைத் தொட்டு தாக்குவது சரியா, நீங்கள் கற்பழிப்பு, கொலை செய்தாலும் பரவாயில்லையா, உங்களது உளவியல் குற்றப் போக்கை தயவு செய்து மாற்றுங்கள். யோகா, தியானத்தை மேற்கொள்ளுங்கள். இல்லையெனில் வாழ்க்கை கசப்பான மற்றும் சுமையான அனுபவமாக மாறும். இவ்வளவு வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றை சுமக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்