- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோக்களை விட பலமடங்கு சம்பளத்தை அள்ளும் சில இயக்குனர்கள், நெல்சன் வாங்கும் சம்பளம் கேட்டு தலை...

ஹீரோக்களை விட பலமடங்கு சம்பளத்தை அள்ளும் சில இயக்குனர்கள், நெல்சன் வாங்கும் சம்பளம் கேட்டு தலை சுற்றிய ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தான் கோடிகளில் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தனர். இப்போது நிலமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. சில இயக்குனர்கள், ஹீரோக்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்குபவர்களாக மாறிவிட்டனர். அதனால் இனி ஹீரோ ஆசையில் சென்னைக்கு வருபவர்களை விட இயக்குனர் ஆசையில் சென்னைக்கு வருவோர் எண்ணிக்கைதான் அதிகரிக்கும்.

இயக்குனர் அட்லிக்கு ரூ. 100 கோடி சம்பளம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளம், கூலி படத்தில் ரூ. 60 கோடி என்று சொல்லப்பட்டது. இயக்குனர் ஷங்கர் சம்பளம் ரூ. 30 கோடி என்கின்றனர். சுந்தர் சி சம்பளம், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ரூ. 20 கோடி என்று சொல்லப்படுகிறது. ஏஆர் முருகதாஸ் ரூ. 40 கோடி கேட்பதாக தகவல் உள்ளது. இப்படி இயக்குனர்கள் சம்பளம் எகிறி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி வாங்குகிறார். கமல் ரஜினி விஜய் அஜீத்குமார் மட்டுமே ரூ. 100 கோடிகளை கடந்த நடிகர்களாக இருக்கின்றனர். தனுஷ் சம்பளம் ரூ. 50 கோடி. சிவகார்த்திகேயன் சம்பளம் இப்போது ரூ. 75 கோடியாக உயர்ந்துள்ளது. அருண் விஜய் சந்தானம் போன்றவர்கள் இன்னும் ரூ. 10 கோடியை தாண்டவில்லை.

இந்த சூழ்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஏப்ரலில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம், அடுத்த ஆண்டில் மே மாத இறுதியில்தான் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு இதுதான் நெல்சன் இயக்கும் அடுத்த படமாகும்.

இந்த படத்தை இயக்க இயக்குனர் நெல்சனுக்கும், நடிக்க ஜூனியர் என்டிஆருக்கும் அட்வான்ஸ் தொகையாக தலா ரூ. 50 கோடியை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தந்துள்ளது. இந்த படம் தயாராகி வெளியான பிறகு, பிராப்பிட் ஷேர் முறையில், லாப அடிப்படையில் இன்னும் பல கோடிகள் அவர்களுக்கு கிடைக்கும். ஆக, நெல்சனின் சம்பளம் அட்வான்ஸ் ரூ. 50 கோடியுடன் பிராப்பிட் ஷேர் ஆகவும் பல கோடிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு 50 கோடி ரூபாய் கிடைத்தால் 100 கோடி ரூபாய் சம்பளமா என ரசிகர்கள் கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.

சற்று முன்