- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாக்யராஜிடம் அந்த பழக்கம் நீண்டகாலம் இருந்தது, ஆனால் அதை செய்ய வேண்டாம் என்று அவரே...

இயக்குனர் பாக்யராஜிடம் அந்த பழக்கம் நீண்டகாலம் இருந்தது, ஆனால் அதை செய்ய வேண்டாம் என்று அவரே எனக்கு அட்வைஸ் செய்வார் – ராசுக்குட்டி நடிகர் செம்புலி ஜெகன் சொன்ன உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் இயக்குனர் கே பாக்யராஜ். சில தினங்களுக்கு முன்பு அவர் மறைந்த சோகம் இன்னும் ரசிகர்களுக்கு குறையவில்லை. கே பாக்யராஜ் 25க்கும் மேற்பட்ட படங்களை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர 75க்கும் மேற்பட்ட படங்களில் அவர் கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் கே பாக்யராஜ் படங்களில் காமெடி காட்சிகள் பிரதானமாக இருக்கும். பல காட்சிகளில் அவரே காமெடி செய்வார். இதுதவிர காமெடி நடிகர்களையும் அவர் நடிக்க செய்து இருக்கிறார். குறிப்பாக கவுண்டமணி செந்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் மண்ணாங்கட்டி சுப்ரமணியம் குலதெய்வம் ராஜகோபால் எஸ் எஸ் சந்திரன் குமரிமுத்து செம்புலி ஜெகன் உள்ளிட்ட பலரை தனது படங்களில் காமெடி ரோலில் நடிக்க செய்தவர் கே பாக்யராஜ்.

- Advertisement -

அதேபோல் அவரிடம் பாடம் கற்ற உதவி இயக்குனர்களான பார்த்திபன் பாண்டியராஜன் லிவிங்ஸ்டன் வி சேகர் போன்றவர்களும் தங்களது படங்களில் காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கே பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் ராசுக்குட்டி ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு மிகச்சிறந்த வெற்றி படமாகும்.

இந்த படத்தில் காமெடி ரோலில் செம்புலி என்ற கேரக்டரில் ஜெகன் நடித்திருந்தார். இவர் இயக்குனர் கே பாக்யராஜிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான். அவரை இந்த படத்தில் ஒரு காமெடி ரோலில் நடிக்க வைத்து அவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். அதன் பிறகு பிற இயக்குனர்களின் படங்களிலும் செம்புலி ஜெகன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் செம்புலி ஜெகன் கூறியதாவது, இயக்குனர் கே பாக்யராஜூக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. அவர் ஒரு செயின்ஸ் ஸ்மோக்கர். ஒரு சிகரெட் முடித்து விட்டால் உடனே அடுத்த சிகரட்டை எடுத்து பற்ற வைத்து விடுவார். படப்பிடிப்பு நேரங்களிலும் கதை விவாதங்களிலும் சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் ஒரு ஷாட்டுக்கு இடையே கேப் கிடைத்தாலும் உடனே வந்து சிகரெட் புகைப்பார்.

ஆனால் யாரோ ஒருவர் ஏதோ சொன்னார் என்பதற்காக சிகரெட் பழக்கத்தை உடனடியாக விட்டுவிட்டார். ஒரே நாளில் சிகரட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக அவர் சிகரெட் புகைப்பதே இல்லை. ஆனால் எனக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. நான் அதற்காக அடிக்கடி காணாமல் போய்விடுவேன். அப்போதெல்லாம் அவனை சிகரெட் பிடிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கப்பா. எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துக்கிறான் என்று படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களிடம் சொல்லி எனக்கு டைரக்டர் அட்வைஸ் செய்வார் என்று நடிகர் செம்புலி ஜெகன் அந்த நேர்காணலில் வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்