- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாராவால் அப்செட் ஆன நடிகை அசின்; கோபத்தில் அவர் காட்டிய ரியாக்‌ஷன்; வசமாக மாட்டிக்கொண்ட இயக்குனர்...

நயன்தாராவால் அப்செட் ஆன நடிகை அசின்; கோபத்தில் அவர் காட்டிய ரியாக்‌ஷன்; வசமாக மாட்டிக்கொண்ட இயக்குனர் ஏஆர் முருகதாஸ் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

கடந்த 2005ம் ஆண்டில் சூர்யா அசின் நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் கஜினி. இந்த படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் அசின் பிரதான நாயகியாகவும் நயன்தாரா 2ம் நிலை நாயகியாகவும் நடித்திருந்தார்.முதலில் கஜினி படத்தில் அஜீத்குமார் சில வாரங்கள் நடித்த நிலையில், அவர் நடிக்க மறுத்து வெளியேறியதால் இந்த படத்தில் சூர்யா நடித்தார்.

நடிகர் சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படமாக கஜினி படம் இருந்தது. இந்த படத்தில் சஞ்சய் ராமசாமியாக ஏர்வாய்ஸ் மொபைல் போன் நிறுவன தொழிலதிபராக பிரமாதமாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நடந்ததை எல்லாம் மறந்து போகும் மனநலம் பாதித்த கேரக்டரிலும் சூர்யா நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்திருக்கிறது. இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மட்டுமே ஷூட்டிங் நடத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மும்பைக்கு பாலியல் தொழில் செய்ய ரயிலில் கடத்தி செல்லப்படும் சிறுமிகளை காப்பாற்றி கதாநாயகி அசின், சென்னை எக்மோருக்கு மீட்டு வருவது போலதான் காட்சி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அப்போது ரயில்வே ஸ்டேஷனில் ஷூட்டிங் ஆரம்பிக்க எல்லாம் தயார் செய்த நிலையில், அனைவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது நடிகை அசின், இயக்குனர் முருகதாஸிடம் இன்னொரு பாட்டு படத்தில் இருக்கிறதே, அதை எப்போது ஷூட் பண்ண போறீங்க என்று கேட்டிருக்கிறார். அந்த பாட்டு உங்களுக்கு அல்ல, நயன்தாராவுக்கு என்று ஏஆர் முருகதாஸ் யதார்த்தமாக கூறியிருக்கிறார்.

இதனால் கோபமான நடிகை அசின் கேரவனுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். இயக்குனர் ஏஆர் முருகதாஸ், உதவி இயக்குனர் மற்றும் அங்கிருந்த படக்குழுவினர் பலரும் கேரவன் கதவை தட்டியும் அசின் கதவை திறக்கவில்லை. இப்படியே 2 மணி நேரம் போன பிறகு கேரவன் கதவை திறந்த அசின், எனக்கு கடுமையான வயிற்றுவலி, இப்ப நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.

பின்னர் ஏஆர் முருகதாஸ் ஒருவழியாக அசினை சமாதானப்படுத்தி மீதம் இருந்த ஒரு மணி நேரத்தில், சிறுமிகளுடன் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் அசின் நடந்து வருவது போல காட்சிகளை படமாக்கி, ரயிலில் எடுக்க திட்டமிட்ட காட்சிகளை எல்லாம் சூர்யா போனில் பேசுவது போல் மாற்றி எடுத்து சமாளித்திருக்கிறார். அதன்பிறகு அசின் பெயரை சொன்னாலே ஏஆர் முருகதாஸ் முகம் மாறிவிடும் என்று கஜினி படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவத்தை வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்