வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் லியோ. மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்துள்ள இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
காஷ்மீர், சென்னை, தலக்கோணத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது லியோவுக்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்திலும், சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக வரும் 7ம் தேதியே லண்டனில் முன்பதிவு தொடங்குகிறது. இந்த படத்திற்கான ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது. இப்படி லியோவின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக தளபதி 68 படத்தின் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன.
இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்யுடன் பிரியங்கா மோகன் டூயட் ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெய், எஸ் ஜே சூர்யா, மாதவன், பிரபுதேவா உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற இருப்பதாக பேசப்படுகிறது.
தளபதி 68 படத்தை பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக எடுக்க வெங்கட் பிரபு எடுக்க திட்டமிட்டுள்ளாராம். லியோ படம் ரிலீசான பிறகே, தளபதி 68-ன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில், படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்தின் லுக் டெஸ்ட்டிற்காக விஜய் கலிபோர்னியா சென்றுள்ளார்.
இதனிடையே தளபதி 68-ல் இசையமைப்பாளர் தமன் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிவிக்கப்பட்ட நிலையில், இவர் எங்கிருந்து வந்தார் என பலரும் குழம்பி போயினர். இந்த நிலையில் தமன், யுவனுக்கு பதிலாக வரவில்லை என்றும், அவர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ப்ரோகிராமராகதான் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தில் தமன், அதிரி புதிரியான இசையை கொடுத்ததால், இந்த படத்தில் யுவனுடன் சேர்ந்து அவர் மேஜிக்கை நிகழ்த்துவார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.





