- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மீண்டும் அதே பார்மூலாவில் பயணிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் - சென்டிமென்ட் தான் இதற்கு காரணமா?...

மீண்டும் மீண்டும் அதே பார்மூலாவில் பயணிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் – சென்டிமென்ட் தான் இதற்கு காரணமா? – முகம் சுளிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் காம்பியராக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கியவர் சிவகார்த்திகேயன். அவரது மிமிக்ரி திறமையும் ரஜினியின் ஸ்டைலும் பேசுகிற தொனியும் வெகுவாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. பிறகு விருது விழாக்களை கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், மெரினா படம் மூலம் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றுத் தர தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராக முன்னணியில் நிற்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 75 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன் மெரினா படத்தில் நடித்த போது அவரது முதல் சம்பளம் ரூ. 10 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை ரிலீஸ் ஆன படங்கள் 22. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும், எஸ்கே 24 என்ற படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். இன்னும் எஸ்கே 24 படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்த படத்தை குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் உறுதியான அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 22 படங்களில் பல படங்கள் பழைய படங்களின் டைட்டில்களாகவே இருக்கின்றன. இப்போது புதிதாக அவர் நடித்து வரும் 2 படங்களின் டைட்டில்களும் பழைய படங்களின் டைட்டில்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படி தொடர்ந்து பழைய படங்களின் டைட்டில்களில் சிவகார்த்திகேயன் நடிப்பது ரசிகர்களை அதிருப்தியடைய வைக்கிறது.

நடிகர் கமல் நடித்த காக்கி சட்டை , நடிகர் ரஜினி நடித்த வேலைக்காரன் மற்றும் மாவீரன், நாகேஷ் நடித்த எதிர்நீச்சல், நடிகர் ரகுமான் நடித்த ஹீரோ, நவரச நாயகன் கார்த்திக் நடித்த அமரன், சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி, நடிகர் அர்ஜூன் நடித்த மதராஸி என இந்த படங்களின் டைட்டில் எல்லாமே சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் டைட்டில்களாக இருக்கின்றன.

அதுவும் பராசக்தி படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படம். அந்த படத்தின் டைட்டில் எப்போதுமே சிவாஜி கணேசனின் பெருமையை சொல்கிற படம். அந்த படத்தின் டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடிப்பது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா நடிகர்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. கதை திரைக்கதை நடிப்பு நன்றாக இருந்தால் படம் ஓடுகிறது. இப்படி பழைய டைட்டில் சென்டிமென்ட்தான் படத்தை ஓட வைக்கிறதா என சிவகார்த்திகேயன் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்